2020 ஆம் ஆண்டு யாருக்கு நன்மைகள் தரும் ?: விரிவான பலன்கள் இதோ..!

2020-01-06 13:00:55

உலகின் வலம் உருண்டு ஓடிக்­கொண்­டி­ருக்­கின்­றது.  2000 ஆம் ஆண்டின்  தொடக்கம் இன்று 2020 எனும் இரு­பது ஆண்­டு­களை தொட்­டு­விட்­டது. காலத்தின் வளர்ச்சி, உலகின் தொழில்­நுட்ப வளர்ச்சி என பல விட­யங்கள் வியப்பின் உச்­சியில் மேலோங்கி நிற்­கின்­றன இவற்றின் ஆரம்பம் எனும் ஆதி­நிலை அனைத்தும் எமது மூதா­தை­யர்கள், எமக்கு முன் வாழ்ந்த சித்­தர்கள், ஞானிகள் எல்­லா­வற்­றையும் புராண இதி­காசம் மூல­மாக எப்­போதோ எழுதி வைத்­து­விட்டுச் சென்ற விட­யங்கள் இன்று  விஞ்­ஞா­ன­மாக நமக்கு வளர்ந்து நிற்­கின்­றது. 

கிர­கங்­களின் அதிர்வும் ஆகர்­ஷ­ணமும் எப்­போதும் மனி­தர்­களை ஆர்ப்­ப­ரித்துக் கொள்­கின்­றன.  மனித வாழ்வில் அமையும் நன்­மைகள், தீமைகள், அதிர்­வுகள்  அத்­த­னைக்கும்  கிர­கங்­களின் ஆகர்­ஷணம் மிக முதன்­மை­யாக இருக்கும். கிரகப் பெயர்ச்­சிகள்,  தினப்­ப­லன்கள்,  வாரப் பலன்கள், சந்­திரா ஷ்­டமம், ஜென்­ம­தி­ரயம்,  ஜென்ம நட்­சத்­திரம், ஜென்­ம­ராசி, லக்னா அஷ்­டகம் என  ஏதோ ஒரு­வ­கையில் மனித வாழ்வின் அத்­தனை விட­யங்­களும் கிர­கங்­களின்  ஆகர்­ஷ­ணத்­தோடும் ஆர்ப்­ப­ரிப்­போடும் அமை­வதே நமது வாழ்­வியல் நடை­முறை. எனவே,  இதற்­க­மைய நாம் செயல்­படும் நிலையே நமக்கு ஏற்ப பலன்கள் அமைந்து கொண்டிருக்­கின்­றன. அந்த வகையில் அமையப் போகும் 2020 ஆம் ஆண்­டிலே எப்­ப­டி­யான பலா­ப­லன்­களை நாம் எதிர்­கொள்ளப் போகின்றோம்  எனும் எண்­ணப்­பாங்கு எல்­லோ­ருக்கும் உண்டு. 

 அந்த வகையில் இந்த 2020  ஆம் ஆண்­டி­னிலே மூன்று கிரகப் பெயர்ச்­சிகள் அமைய இருக்­கின்­றன. 02 . 09 . 2020 புதன்­கி­ழ­மை­யன்று சாயக்­கி­ர­கங்­க­ளான ராகு, கேது பெயர்ச்சி அமை­கின்­றது. மிதுன ராசி­யி­லி­ருந்து  இட­ப­ரா­சிக்கு  ராகுவும் தனு­சு­ரா­சியில் இருந்து விருட்­சிக ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி  பெறு­கின்­றன.  அதே  போன்று 15. 11. 2020  ஞாயிற்­றுக்­கி­ழமை தனு­சு­ரா­சியில் இருந்து  மகர ராசிக்கு குரு­ப­கவான்  பெயர்ச்சி பெறு­கின்றார். அடுத்து 26.12 . 2020  சனிக்­கி­ழமை சனி­ப­கவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி பெறு­கின்றார்.

  எனவே,  மூன்று கிரகப் பெயர்ச்­சிகள் 2020 ஆம் ஆண்டு பிற்­ப­கு­தியில் தொடர்ந்து அமை­கின்­றன. நாம் எதைச்  செய்­தாலும் அதை மன­நி­றைவாய் சந்­தோ­ஷமாய் மனப்­பூர்­வமாய்  செய்து கொள்ள வேண்டும். சிறு சிறு விட­ய­மா­யினும் மற்­ற­வரின் மனதை  வருத்த செய்யும் செயல்­களை தவிர்க்க வேண்டும்.  தர்­ம­நெ­றி­யான  வாழ்­வி­ய­லா­னது அவை­வ­ருக்கும் அனைத்து நிறைவும் தரக்­கூ­டி­யது. எனவே, 2020 ஆம் ஆண்­டிலே அனை­வரும் நல்­ல­ன­வற்றை பின்­பற்றி வாழ்­வில் வெற்றி பெறுங்கள். ! 

மேட ராசி  (அஸ்­வினி, பரணி,  கார்த்­திகை 1 ஆம் பாதம் ) 
மன­தார எல்­லோ­ருக்கும் உதவி செய்யும்  மேட­ராசி அன்­பர்­களே, உங்­களின் ராசிக்கு 2020 ஆம் ஆண்டு எப்­படி அமையப் போகின்­றது  எனும் எதிர்­பார்ப்பு மன­திலே இருக்கும். உங்­களின்  ராசிக்கு ஆண்டின் முற்­ப­குதி  மிக மிக சிறப்­பாக அமையும். குருவின் பாக்­கி­யஸ்­தான சஞ்­சாரம் சனீஸ்­வரன் பாக்­கி­யஸ்­தான சஞ்­சாரம் என இரண்­டுமே மிகவும் சிறப்­பாக அமை­கின்­றன.  தொழில் நிலைச் சிறப்பு, திருப்­தி­க­ர­மான பண­வ­ரவு, வழக்கு விவ­கா­ரங்­களில் வெற்றி, திரு­மணம் போன்ற சுப­கா­ரியம் எதிர்­பார்க்­கின்­ற­வர்­க­ளுக்கு  அப்­பலன் நிறை­வாக அமையும் நிலை. புதிய முயற்­சி­க­ளிலே சிறப்­பான வெற்­றிகள் என  தொட்­டது எல்­லாமே துலங்கும்  காலமாய் அமையும்.  

2020 ஆம் ஆண்­டிலே பல­வித நன்­மை­களை, சிறப்­பு­களை நீங்கள் பெறக்­கூ­டிய நிலைகள் சிறப்­பாக அமையும் பல­னுண்டு. உங்­களின் நீண்­ட­கால திட்­டங்­களை வெற்­றி­க­ர­மாக  நிறை­வேற்றிக் கொள்ள முடியும்.  02. 09. 2020 புதன் கிழமை அமை­கின்ற ராகு , கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு  ராகு 2 ஆம் இடம்,  கேது 8 ஆம் இடம் என  அமை­வது சற்று மந்­த­மான பலன்­களைக் கொடுக்கும்.  15. 11. 2020 ஞாயிறு குருப் பெயர்ச்சி உங்கள்  ராசிக்கு ஜீவ­னஸ்­தா­ன­மா­கிய 10 ஆம் இடம் அமை­கின்­றது. தொழில் சார்ந்த அலைச்சல், இட­மாற்­றங்கள் அமையும். ஆண்டின் நிறைவு வாரம் 26 . 12. 2020  சனிப் பெயர்ச்சி அமையும். இதுவும் உங்கள் ராசிக்கு தொழில் சார்ந்த சிக்கல் அமையும். எனவே 2020    ஒக்­டோபர் மாதம் வரை உங்­களின் ராசி நிலைக்கு மிகவும் சிறப்­பான நன்­மைகள் அமையும்.  நீங்கள் 90 %   நற்­பலன் பெறும் நிலை உண்டு. 

இடப ராசி  (  கார்த்­திகை 2,3,4 ஆம் பாதம், ரோகிணி,  மிரு­க­சீ­ரிடம் 1,2 ஆம் பாதம் ) 
தனித்­துவமாய்   உங்­களை அடை­யா­ளப்­ப­டுத்த போராடும்  குணம்  கொண்ட இடப ராசி அன்­பர்­க­ளுக்கு.  2020 ஆம் ஆண்டு உங்கள் ராசி நிலைக்கு சற்று சிர­ம­மான பலன்­களே அதி­கமாய்  இருக்கும். குடும்ப  நிலையில் தேவை­யற்ற வீண்  பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டிய  நிலை­யி­ருக்கும். தொழில் சார்ந்த வேலைப்­பளு, தொழில் நிலை பதவி துறப்பு, உடல் நிலை சார்ந்த உபா­தைகள், கடன் பிரச்­சி­னைகள், எதிர்­பா­ராத திடீர் சத்­திர சிகிச்சை போன்ற  பலன்கள் ஏற்­படும் நிலை­யி­ருக்கும். உங்கள் ராசிக்கு அட்­ட­மத்து குரு,  அட்­ட­மத்­து­சனி என அமை­வ­தனால்  பல­வித பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டிய நிலை இருக்கும். எனவே, மிகவும் பொறுமை, நிதானம் கொண்டு  செயற்­ப­டு­வதே நல்­லது. திரு­மணம் போன்ற  சுப­கா­ரிய பலன்  எதிர்­பார்க்­கின்­ற­வர்­க­ளுக்கு அப் பலன் தடைகள், தாமத, இழு­பறி நிலைகள் என அமையும். எனவே உங்கள் எதிர்­பார்ப்­பு­களில் சற்று சிக்கல் நிலை இருக்கும்.  02. 09. 2020  இல் அமையும்.  ராகு ,  கேது பெயர்ச்­சியும் உங்­க­ளுக்கு  சிர­ம­மான தாகவே இருக்கும். 15. 11. 2020 அன்று அமையும்  குருப் பெயர்ச்சி உங்­க­ளுக்கு அப்­பாடா !  எனும் நிம்­மதி பெருமூச்சு விட­வைக்கும்.  ஆண்டு நிறைவில் 26. 12. 2020 இல் அமையும்  சனிப் பெயர்ச்­சியும் நன்­மை­யா­கவே  அமை­கின்ற  நிலை­யி­ருக்கும்.  இவை  எல்லாம் ஆண்டு பிற்­ப­குதி நிறைவில் அமை­வ­தனால் 2020 ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு அதி­க­மான  சிர­மங்­களைக் கொடுக்கும். இந்த ஆண்டு 40 %  நன்­மை­களே நீங்கள் பெறலாம். 

மிதுன ராசி  ( மிரு­க­சீ­ரிடம் 3, 4 ஆம் பாதம், திரு­வா­திரை, புனர்­பூசம் 1,2,3 ஆம் பாதம்) 
அமை­தி­யாக  செயற்­பட்டு அனைத்துக் காரி­யங்­க­ளிலும் வெற்­றி­யீட்டும் மிதுன ராசி அன்­பர்­க­ளுக்­கு, உங்­களின் ராசிக்கு இந்த 2020 ஆம் ஆண்டு முற்­ப­குதி மிகவும் அனு­கூ­ல­மாக அமையும் பல­னுண்டு. தொழில் நிலை சார்ந்த எதிர்­பா­ராத திடீர் நன்­மைகள் ஏற்­படும். பண­வ­ரவு ஓர­ள­வுக்கு தேவை­களைப் பூர்த்­தி­யாக்கும். திரு­மணம் போன்ற சுப­கா­ரியம் எதிர்­பார்க்­கின்­ற­வர்­க­ளுக்கு  அப்­பலன் அனு­கூ­ல­மா­ன­தாக அமையும் பல­னுண்டு. எதிர்­பார்ப்­பு­களில் இடை­யி­டையே சிறு சிறு தடை, இழு­பறி நிலைகள் ஏற்­படும் பல­னி­ருக்கும் பொது­வாக சனீஸ்­வ­ரனின் 7 ஆம் இட சஞ்­சாரம் இடை­யி­டையே சற்று சிர­ம­மான  பலன்­களைக் கொடுக்­கின்ற நிலை­யி­ருக்கும்.  

2020 செப்­டெம்பர் 2 ஆம் திகதி அமையும்  ராகு, கேது பெயர்ச்சி உங்­க­ளுக்கு எதிர்­பா­ராத திடீர் நன்­மை­களைக் கொடுக்கும் நிலை­யி­ருக்கும். எனவே, அக்­டோபர் மாதம் வரை உங்­களின் ராசி நிலைக்கு பெரும் சிர­மங்கள் அமைய  இட­மில்லை 15.11.2020  அன்று அமையும் குருப் பெயர்ச்சி உங்கள் ராசி நிலைக்கு சற்று சிர­மங்­களைக் கொடுக்கும் நிலை இருக்கும். எதையும் திட்­ட­மிட்டு செய்ய முடி­யாத நிலை அமையும். ஆண்டின் நிறைவில் 26 .12 .2020 அன்று அட்­ட­மத்து சனி சஞ்­சாரம் ஆரம்பம். எனவே, அதன் பின்னர் எந்த விட­ய­மா­யினும் சற்று பொறுமை, நிதா­ன­முடன் செயற்­பட வேண்டும். பெண்­க­ளுக்கு மனச்­சஞ்­சலம், மாண­வர்கள் கல்­வியில் மந்த நிலை,  தொழில் சார்ந்த பிரச்­சி­னைகள் என பல வகை­யிலும் சிக்கல் நிலைகள் அமைந்­தி­ருக்கும். எனவே, 2020 உங்­க­ளுக்கு 65%  நன்­மைகள் உண்டு. 

கடக ராசி  (புனர்­பூசம் 4 ஆம் பாதம் , பூசம் ,  ஆயி­லியம்) 
தம் காரி­யங்­களில் கவ­ன­மாக  செயல்­பட்டு வெற்­றிகள்  பெறும் ஆற்­ற­லு­டைய கடக ராசி அன்­பர்­க­ளுக்கு, உங்­களின் ராசி நிலை க்கு 2020 ஆம் ஆண்டு ஓர­ள­வுக்கு அனு­கூல பலன்கள் கொடுக்கும் நிலை­யுண்டு. தொழில் நிலை சார்ந்த சிறு சிறு பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ள வேண்­டிய நிலை­யி­ருக்கும். குடும்ப நிலையில் இடை­யி­டையே சிறு சிறு சிர­மங்கள், மனச்­சஞ்­சல நிலை என்­பன ஏற்­படும். நிலை­யி­ருக்கும். சனீஸ்­வ­ரனின் 6 ஆம் இட சஞ்­சாரம் திடீர் நன்­மைகள், மகிழ்வு தரும் பலன்­களை ஏற்­ப­டுத்­து­கின்ற நிலையும் இருக்கும். குருவின் 6 ஆம் இட சஞ்­சாரம் அலைச்சல், இழு­பறி நிலை­களை ஏற்­ப­டுத்தும்.  புதிய முயற்­சி­களில் சிக்கல் நிலைகள் அமையும். எதிர்­பா­ராத திடீர் கடன், பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டிய நிலைகள் ஏற்­படும். 02. 09. 2020 அன்று உங்­களின் ராசிக்கு ராகு, கேது கிர­கங்கள் முறையே ராகு 11 ஆம் இடமும் கேது 5 ஆம் இடமும் அமை­கின்ற­ன.  இந்தப்  பெயர்ச்சி அனு­கூ­ல­மான நற்­ப­லங்­களைக் கொடுக்கும் நிலை­யி­ருக்கும். 15 . 11. 2020 அமையும் குருப் பெயர்ச்சி களத்­தி­ரஸ்­தா­ன­மா­கிய  7 ஆம் இடம் அமை­வதன் மூலம் எதிர்­பா­ராத சிறு சிறு திடீர் நன்­மைகள் அமையும் பலன் இருக்கும். ஆண்டின் நிறை­விலே அமை­கின்ற சனிப் பெயர்ச்சி 26 . 12. 2020  அன்று உங்­களின் ராசி  நிலைக்கு 7 ஆம் இடம் அமை­வது மத்­தி­ம­மான பலனே கொடுக்கும். எனவே, பொது­வாக இந்த 2020 ஆம் ஆண்டு உங்­க­ளுக்கு  பெரும் சிறப்­புகள், நன்­மைகள் அமையும் பலன் மிகவும் குறைவே. ஓர­ள­வுக்கு சிறு நன்­மைகள் இடை­யி­டையே அமையும் பலன் இருக்கும். அதற்கு ஏற்ப செயற்­பட்டு வெற்­றி­களை பெற­வேண்டும். 2020 ஆம் ஆண்டு 50%  நன்­மைகள் அமைய இட­முண்டு.

(சிம்ம ராசி (மகம், பூரம், உத்­தரம் 1 ஆம் பாதம் ) 
ஆளு­மை­யுடன்  எதையும் சாதிக்கும்  குண இயல்பைக் கொண்ட சிம்ம ராசி அன்­பர்­க­ளுக்கு  உங்­களின் ராசிக்கு 2020 ஆம் ஆண்டு அனு­கூ­ல­மான நன்­மைகள் அமையும் பலா­பலன் ஏற்­படும் . தொழில் நிலையில் அனு­கூ­ல­மான நன்­மைகள் இருக்கும். குடும்­பத்தில் எதிர்­பார்ப்­புகள் நிறை­வேறும் பலன் இருக்கும். புதிய முயற்­சி­களில் வெற்­றிகள் அமையும் நிலை­யி­ருக்கும். பண­வ­ரவு மிகவும் திருப்­தி­க­ர­மா­ன­தாக  அமையும். திரு­மணம் போன்ற சுப­கா­ரி­யங்­களை  எதிர் பார்க்­கின்­ற­வர்­க­ளுக்கு அப்­பலன் அனு­கூ­ல­மா­ன­தாக  அமையும். வெளி­நாட்டு பிர­யா­ணங்கள் அமையும் பலா­ப­லனும் ஏற்­படும். கடன் நிலை­களில் சுமு­க­மான நிலை  ஏற்­படும். வழக்கு விவ­கா­ரங்­களில் வெற்­றிகள் அமைய  இட­முண்டு. பெண்­க­ளுக்கு மன மகிழ்­வான பலன்­களே அமைந்­திடும் . மாண­வர்­களின்  கல்­வியில் முன்­னேற்­ற­க­ர­மான பல­னி­ருக்கும். பொது­வாக ஆண்டின் முற்­ப­கு­தியில் உங்­க­ளுக்கு ஏற்­ற­மான நற்­ப­லன்­க­ளுக்கு அதி­க­மான  இட­முண்டு. 02. 09. 2020 அன்று அமையும்  ராகு ,கேது பெயர்ச்சி முறையே ராகு 10 ஆம் இடமும் கேது 4 ஆம் இடமும் அமை­வது சற்று மத்­தி­ம­மான பலன்­களைக் கொடுக்கும். அலைச்சல் நிலைகள் சற்று அதி­க­மாக  அமைந்­தி­ருக்கும். 15.11.2020 அன்று அமையும் குருப் பெயர்ச்சி உங்கள் ராசிக்கு ரோகஸ்­தா­ன­மா­கிய  6 ஆம் இடம் அமை­வது மன­திலே சஞ்­ச­ல­மான பலன்­களை கொடுக்கும். உடல் நிலையில் சிறு சிறு உபா­தைகள், மருத்­துவ செலவு ஏற்­ப­டும். ஆண்டின் நிறைவில் 26.12.2020 அன்று அமையும் சனிப் பெயர்ச்சி உங்­களின் ராசிக்கு 6 ஆம் இடம் அமை­வது எதிர்­பா­ராத திடீர் நன்­மை­களைக் கொடுக்கும். பொது­வா­கவே 2020  ஆம் ஆண்டின் முற்­ப­கு­தி­யிலே அதி­க­மான நன்­மை­களை பெற முடியும். உங்கள் ராசிக்கு 80 % நன்­மை­களை பெற முடியும்.   

கன்னி ராசி  (உத்­தரம் 2,3, 4 ஆம் பாதம் அத்தம், சித்­திரை 1,2, ஆம் பாதம்)
எப்­போதும் சிந்­த­னையும் போராட்­டமும் கொண்ட கன்னி ராசி அன்­பர்­க­ளுக்கு,  உங்­களின் ராசிக்கு 2020 ஆம் ஆண்டு சற்றுப்  போராட்­ட­மான நிலை­க­ளையே  கொடுக்கும். தொழில் சார்ந்த வேலைப்­பளு அதி­க­மாக  இருக்கும். பண­வ­ரவு சற்று மத்­தி­ம­மா­ன­தா­கவே  அமை­கின்ற நிலை­யி­ருக்கும்.  காரி­யத்­தடை, தேவை­யற்ற அலைச்சல் போன்ற நிலை­யி­ருக்கும். எந்த விட­ய­மா­யினும் சற்று பொறுமை, நிதா­னத்­துடன் செயற்­பட வேண்டும். மனச்­சஞ்­சல நிலை, உடல் நிலையில் சிறு சிறு சுக­யீனம் என்­பன இடை­யி­டையே ஏற்­பட்டு மறையும் பல­னுண்டு. தாயார் மூலமும் செல­வீ­னங்கள் அமைய இட­முண்டு. திரு­மணம் போன்ற சுப­கா­ரியம் எதிர்­பார்ப்­ப­வர்­க­ளுக்கு அப்­பலன் சற்று இழு­பறி நிலையை கொடுக்­கின்ற நிலை­யி­ருக்கும். பெண்­க­ளுக்கு மனப் போராட்ட நிலை அதி­க­மி­ருக்கும். மாண­வர்கள்  சற்றுக் கூடு­த­லான கவனம்  எடுக்க வேண்டும் .  02. 09. 2020  அன்று அமையும் ராகு, கேது பெயர்ச்சி உங்­களின் ராசிக்கு முறையே ராகு 9 ஆம் இடம் கேது 3 ஆம் இடம் என அமை­வது எதிர்­பா­ராத திடீர் நன்­மைகள்,  அதிர்ஷ்ட பலன்கள் அமைய  இட­முண்டு. அத்­தோடு, 15. 11. 2020  அன்று  அமையும் குருப் பெயர்ச்சி உங்­க­ளுக்கு மிகவும் அனு­கூ­ல­மா­ன­தாக, நற்­ப­லன்­களைக் கொடுக்கும். ஆகவே ஆண்டின் பிற்­ப­குதி உங்­களின் எதிர்பார்ப்­பு­களை நிறை­வேற்றக் கூடிய நிலைகள் இருக்கும். எல்லா வகை­யிலும் சிறப்பும் மகிழ்வும் அமையும்.  ஆண்டின் நிறைவில் அமையும் சனிப் பெயர்ச்சி உங்­க­ளுக்கு   சிறு சிறு சிர­மங்­களை  கொடுக்கும் நிலை இருக்கும். பொது­வாக ஆண்டின் முற்­ப­கு­தி­யிலே பொறுமை, நிதா­ன­முடன் செயற்­பட வேண்டும் இந்த ஆண்டில் 55 %  நன்­மைகள் உங்­க­ளுக்கு உண்டு .

துலா ராசி  ( சித்­திரை 3, 4 ஆம் பாதம்,  சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதம் )  
எதையும் நேர்­மை­யாக திட­காத்­தி­ர­மாக செய்யும் ஆற்­றலும் குணமும் கொண்ட துலா ராசி அன்­பர்­க­ளுக்கு, உங்கள் ராசிக்கு 2020 ஆம் ஆண்டு சற்று மத்­தி­ம­மா­ன­தா­கவே அமையும். எடுக்கும். முயற்­சி­களில் சிறு சிறு தடைகள், தாமத நிலைகள்  இருக்கும்.  தொழில் நிலை­களில் சற்று சிக்கல் நிலைகள் அமையும்.  குடும்ப நிலை­க­ளிலும் மனச்­சஞ்­சல நிலை, இழு­பறி நிலை அமையும்.  புதிய முயற்­சி­களில் சற்று  இழு­ப­றி­யான பலன்கள் இருக்கும். பண­வ­ரவு சற்று மத்­தி­ம­மா­ன­தா­கவே  அமையும். எதையும் திட்­ட­மிட்டு செய்ய முடி­யாத நிலை­யி­ருக்கும். திரு­மணம் போன்ற சுப காரி­யங்­களை  எதிர்­பார்க்­கின்­ற­வர்­க­ளுக்கு  அப்­பலன் சற்று மத்­தி­ம­மா­ன­தா­கவே அமையும். மாண­வர்கள் கல்வி நிலையில் கூடு­த­லான முயற்சி எடுக்க வேண்டும் .

 02. 09. 2020 அன்று அமையும் ராகு, கேது பெயர்ச்சி உங்­களின் ராசி நிலைக்கு மத்­தி­ம­மா­ன­தா­கவே  அமையும் நிலை­யுண்டு.  உடல் நிலை உபா­தைகள் , தொழில் நிலை  சிர­மங்கள் ஏற்­படும். 15 .11 .2020  அமையும் குருப் பெயர்ச்சி உங்கள் ராசிக்கு சுகஸ்­தானமாகிய 4 ஆம் இடம் அமை­வது எதிர்­பா­ராத திடீர் சுக­யீ­னங்கள் , தேவை­யற்ற வீண் அலைச்சல் நிலைகள் அமையும். ஆண்டின் நிறை­வு­களில் அமையும். சனிப் பெயர்ச்சி 26. 12 . 2020 அன்று உங்கள் ராசிக்கு கண்­டார்த்த சனி­யாக 4 ஆம்  இடத்தில் அமை­கின்­றது.  இதுவும் உங்­களின் ராசி நிலைக்கு மத்­தி­ம­மான  சுமா­ரான   பலன்­க­ளையே கொடுக்கும். அலைச்சல் நிலை சற்று அதி­க­மா­கவே அமையும். எனவே, பொறுமை நிதா­ன­முடன் செயற்­பட வேண்டும். 2020 ஆம் ஆண்­டிலே பெரும் நன்­மை­களை  எதிர்­பார்க்க முடி­யாது சிர­ம­மான  நிலைகள் இருக்கும். இந்த ஆண்டு 45 %  நன்­மைகள் அமையும் . 

விருட்­சிக  ராசி   (விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம் , கேட்டை ) 
வலு­வான சிந்­த­னையும் செயல்­பாடும் கொண்ட விருடசிக ராசி அன்­பர்­க­ளுக்கு,  உங்­களின் ராசிக்கு 2020 ஆம் ஆண்டு ஓர­ளவுக்கு அனு­கூ­ல­மான பலன்கள் அமையும் நிலை உண்டு. குடும்ப நிலையில் எதிர்­பா­ராத நன்­மைகள் இருக்கும். பண­வ­ரவு மிக­வும்­தி­ருப்­தி­க­ர­மான நிலையில் அமையும். தொழில் சார்ந்த முன்­னேற்­ற­மி­ருக்கும்     எதிர்­பா­ராத நன்­மைகள் அமையும் பல­னி­ருக்கும் திரு­மணம் போன்ற சுப காரி­யங்­களை எதிர்­பார்க்­கின்­ற­வர்­க­ளுக்கு அப்­பலன் நிறை­வாக அமை­கின்ற  நிலை­யி­ருக்கும். கடன் நிலை­களில்  சுமு­க­மான பலன் அமையும். ஏழ­ரைச்­சனி சஞ்­சாரம் கடைக்­கூற்று நிலை­யாக  அமை­வதால் திடீர் நன்­மை­களைக் கொடுக்கும்  நிலை அமையும். மாண­வர்­களின் கல்வி நிலையில் அனு­கூ­ல­மான பல­னி­ருக்கும். 02. 09. 2020  அன்று அமை­கின்ற ராகு , கேது பெயர்ச்­சியின் மூல­மாக திடீர் நன்­மைகள் அமையும் பல­னி­ருக்கும். ஓர­ள­வுக்கு எதிர்­பார்ப்­பு­களில் வெற்­றிகள் அமையும் நிலை­யி­ருக்கும். 15. 11. 2020 அமையும். குருப் பெயர்ச்சி சற்று சிறு சிறு சிர­மங்கள் கொடுக்கும் நிலை­யி­ருக்கும். இருப்­பினும் எதையும் சமா­ளித்து செயற்­படக் கூடிய அனு­கூலம் இருக்கும். ஆண்டின் நிறை­விலே 26. 12 . 2020 அன்று அமையும் சனிப் பெயர்ச்­சி­யுடன் ஏழ­ரைச்­சனி நிறைவு பெறும். அதன் பின் அனு­கூ­ல­மான நன்­மைகள் அமையும். எப்­ப­டியும் எதிர்­பார்ப்­பு­களில் நல்ல வெற்­றிகள் இருக்கும். எதையும் சமா­ளிக்கும் ஆற்றல் அமையும். இந்த ஆண்­டிலே உங்­க­ளுக்கு சிறப்­புகள் உண்டு. 80% நன்­மைகள் அமையும் நிலை­யுண்டு. 

தனுசு ராசி (மூலம், பூராடம், உத்­த­ராடம் 1 ஆம் பாதம் ) 

தைரி­ய­மான செயலும் குணமும் கொண்ட தனு­சு­ராசி அன்­பர்­க­ளுக்கு,  உங்­களின் ராசி நிலைக்கு 2020 ஆம் ஆண்டு சற்று மத்­தி­ம­மா­ன­தா­கவே  அமையும் நிலை­யுண்டு. தொழில் நிலை­களில் எதிர்­பா­ராத திடீர் பிரச்­சி­னைகள் அமையும் பல­னி­ருக்கும்.குடும்ப நிலையில் தேவை­யற்ற  பிரச்­சி­னைகள் ஏற்­படும். பண­வ­ரவு சற்று மத்­தி­ம­மா­ன­தா­கவே இருக்கும். எடுக்­கின்ற முயற்­சி­களில் ஏதோ­வொரு சிக்­கல்கள், பிரச்­சி­னைகள் அமையும் நிலை­யி­ருக்கும். திரு­மணம் போன்ற சுப­கா­ரியம் எதிர்­பார்க்­கின்­ற­வர்­க­ளுக்கு அப்­பலன் சற்று மத்­தி­ம­மா­ன­தா­கவே  அமையும். பெண்­க­ளுக்கு மனச்­சஞ்­சலம், தேவை­யற்ற பிரச்­சி­னைகள் என்­பன ஏற்­படும். மாண­வர்­களின் கல்வி நிலையில் குழப்ப நிலைகள் இருக்கும். சற்றுக் கூடு­த­லான முயற்சி எடுக்க வேண்டும். 02. 09 .2020 அன்று அமை­கின்ற ராகு , கேது பெயர்ச்­சி­யா­னது எதிர்­பா­ராத திடீர் நன்­மைகள் கொடுக்கும் நிலை­யி­ருக்கும். இருப்­பினும் ஜென்ம குரு சஞ்­சா­ரமும் ஏழ­ரைச்­சனி நடுக்­கூற்று சஞ்­சா­ரமும் எதிலும் ஒரு போராட்ட நிலையை கொடுக்கும். .   2020 செப்­டெம்பர் 15 ஆம் திகதி அமை­கின்ற  குருப் பெயர்ச்சி உங்கள் ராசிக்கு தனஸ்­தா­ன­மா­கிய  2 ஆம் இடத்­திலே அமை­வதன் மூல­மாக ஓர­ள­வுக்கு அனு­கூ­ல­மான பலா­ப­லன்கள் அமையும்  நிலை­யி­ருக்கும். தொழிலில் சிறு சிறு நன்­மைகள், சிறப்­புகள் அமையும். எதையும் சமா­ளிக்கக் கூடிய  ஒரு நிலை உரு­வாகும் பல­னி­ருக்கும். 26. 12. 2020   அன்று அமையும் சனிப் பெயர்ச்சி உங்­களின் ராசிக்கு ஏழ­ரைச்­சனி கடைக் கூற்று சனி­யாக அமை­கின்­றது. எனவே,  2020 இல்  அமையும் முற்­ப­குதி உங்­க­ளுக்கு பல வகை­யிலும் அலைச்சல் கொடுக்கும். இந்த ஆண்டில் 40 %  நன்­மை­களை நீங்கள் பெறலாம்.             

மகர ராசி (   (உத்­த­ராடம் 2, 3, 4 ஆம் பாதம் , திரு­வோணம் , அவிட்டம் 1,2 ஆம் பாதம் ) 
மன­திலே எதையும் வைக்­காமல் வெளிப்­ப­டை­யாக பேசு­கின்ற சுபா­வமும் செயலும் கொண்ட மகர அன்­பர்­க­ளுக்கு, உங்­களின் ராசிக்கு 2020 ஆம் ஆண்டு சற்று சுமா­ரான மத்­தி­ம­மான பலனே கொடுக்கும். அலைச்சல் நிலைகள் அதி­க­மாக இருக்கும். எதையும் திட்­ட­மிட்டு செய்ய முடி­யாத நிலை அமைந்­தி­ருக்கும். குடும்ப நிலையில் சிறு சிறு பிரச்­சி­னைகள் சூழும். தொழில் நிலை  சார்ந்த பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ள  வேண்­டி­வரும். எதிர்­பா­ராத திடீர் செல­வீ­னங்கள் அமையும்  பலனும் அமைந்­தி­ருக்கும். பொது­வாக எந்த விட­ய­மா­யினும் சற்று போரா­டியே ஜெயிக்க வேண்­டிய  நிலை­யி­ருக்கும். உங்கள் ராசிக்கு ஏழ­ரைச்­சனி சஞ்­சா­ரமும் குருவின் விர­யஸ்­தான சஞ்­சா­ரமும் சற்று சிக்­க­லான நிலை­களை கொடுக்கும் . திரு­மணம் போன்ற  சுப­கா­ரியம் எதிர் நோக்­கு­வோ­ர­க­ளுக்கு அப்­பலன் சற்று மத்­திம  இழு­பறி நிலை­களைக் கொடுக்கும். பொறுமை, நிதா­ன­முடன் செயற்­பட வேண்டும். 02. 09. 2020 அமையும் ராகு, கேது பெய­ரச்­சி­யா­னது  உங்­களின் ராசிக்கு சற்று மத்­தி­ம­மா­ன­தா­கவே இருக்கும். 

கேதுவின் 11 ஆம் இடம் சஞ்­சாரம் திடீர் நன்­மைகள் கொடுக்கும் . 15 . 11. 2020 அன்று அமையும் குருப் பெயர்ச்சி உங்­களின் ராசிக்கு ஜென்ம சஞ்­சா­ர­மாக அமை­கின்­றது .உடல் நிலை உபா­தைகள், மனச்­சஞ்­சலம், தேவை­யற்ற பிரச்­சி­னைகள் போன்ற  பலா­ப­லன்கள் அமையும். ஆண்டின் இறுதிப்  பகு­தியில் 26. 12 .2020 அன்று  அமையும் சனிக் பெய­ரச்­சி­யா­னது. ஏழ­ரைச்­சனி ஜென்ம சனி சஞ்­சா­ர­மாக அமை­கின்­றது எனவே , தேவை­யற்ற சஞ்­ச­லங்­களை, பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ள வேண்டி வரும் எனவே, அதற்­கேற்ப நிதா­னத்­துடன் செயற்­பட வேண்டும். 2020 ஆம் ஆண்டு 40 %  நன்­மைகள் அமையும்.  

கும்ப ராசி ( அவிட்டம் 3,4 ஆம் பாதம் , சதயம், பூரட்­டாதி 1,2, 3  ஆம் பாதம் ) 
எதிர்­கா­லத்தை திட்­ட­மிட்டு அதற்­கேற்ப சாணக்­கி­யமாய் செயற்­படும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி அன்­பர்­க­ளுக்கு ,  உங்­களின் ராசி நிலைக்கு 2020 ஆம் ஆண்டு ஓர­ள­விற்கு அனு­கூ­ல­மான வெற்­றி­களும் சிறப்­பு­களும் கொடுக்கும். தொழில் நிலை சார்ந்த வெற்­றிகள் . நன்­மைகள் சிறப்­பாக அமையும் . பண­வ­ரவு திருப்­தி­க­ர­மா­ன­தா­கவே இருக்கும். குடும்ப நிலையில் எதிர்­பா­ராத நன்­மை­களும் சிறப்­பு­களும் இருக்கும். திரு­மணம் போன்ற சுப­கா­ரியம் எதிர்­நோக்­கு­வோர்க்கு அப்­பலன் அனு­கூ­ல­மா­ன­தாக  அமையும் கடன் நிலை­களில் சுமு­க­மான நிலைகள்  இருக்கும். தொழில் நிலை முன்­னேற்றம் சிறப்­பாக அமையும் எல்லா வகை­யிலும் ஆண்டின் முற்­ப­கு­தி­யி­னிலே உங்­க­ளுக்கு அனு­கூ­ல­மான நன்­மைகள் அமையும். 02. 09. 2020 அன்று அமையும் 

ராகு ,கேது பெயர்ச்­சி­யா­னது திடீர் நன்­மைகள் தரு­வதாய் அமையும். கொடுக்கல், வாங்­கலில் அனு­கூல நிலை­யி­ருக்கும். பெண்­க­ளுக்கு மன மகிழ்வும் நன்­மை­களும் ஏற்­படும். மாண­வர்கள் கல்வி நிலையில் முன்­னேற்­றங்கள் அமையும் . 15. 11.2020 அமையும் குருப்­பெ­யர்ச்சி உங்­களின் ராசி நிலைக்கு மத்­தி­ம­மா­ன­தா­கவே இருக்கும். வேலைப்­பளு .தொழில் சார்ந்த பிரச்­சினை, திடீர் செல­வுகள் என்­பன ஏற்­படும். ஆண்டின் நிறைவில் 26. 12 .2020 அன்று அமையும் சனிப் பெயர்ச்சி உங்­க­ளுக்கு ஏழ­ரைச்­சனி சஞ்­சாரம் ஆரம்­ப­மா­கின்­றது. எனவே, ஆண்டின் பிற்­ப­குதி பல­வ­கை­யிலும் சிர­மங்­களைக் கொடுப்­பதாய் இருக்கும். எனவே 2020 ஆம் ஆண்டின் முந்­ப­குதி உங்­க­ளுக்கு மிக சிறப்­பான அனு­கூ­ல­மான  பலன்­களைக் கொடுக்கும் இந்த ஆண்டில் 75% நன்­மைகள் அமையும். 

மீன ராசி  ( பூரட்­டாதி 4 , உத்­த­ரட்­டாதி, ரேவதி ) 
மிகவும் சாதுர்யமாகவும் சாணக்கியமாகவும் செயற்படும் மீன ராசி அன்பர்களுக்கு, உங்களின் ராசிக்கு 2020 ஆண்டு அனுகூலமானதாக அமைகின்ற நிலை இருக்கும். தொழில் சார்ந்த அலைச்சல், வேலைப்பளு என்பன அதிகமாக அமைந்திருக்கும் குடும்ப நிலையில் சிறு சிறு குழப்ப நிலைகள் ஏற்படும். பணவரவு சற்று மத்திமமானதாகவே அமையும். எடுக்கின்ற முயற்சிகளில் சற்று அலைச்சல் நிலை அதிகமாக அமைந்திருக்கும். எதிர்பாராத திடீர் பிரயாண நிலைகள் அமையும். தல யாத்திரைகள் அமையும்.  பலனும் இருக்கும் திருமணம் போன்ற  சுபகாரியங்களை எதிர் பார்க்கின்றவர்களுக்கு சற்று இழுபறி, தாமத நிலைகள் அமையும் மாணவர்களின் கல்வி நிலையில் மந்தமான பலன்கள் இருக்கும். 02.09.2020 அன்று அமையும் ராகு, கேது பெயர்ச்சி உங்களின் ராசிக்கு நல்ல அனுகூலமான  பலன்களைக் கொடுக்கும் பொதுவாக சிறு சிறு பிரச்சினை, அலைச்சல் நிலைகள் அமைந்தாலும் ஓரளவிற்கு அனுகூலமான  நன்மைகள் அமையும் பலன் இருக்கும். 15. 11. 2020 அன்று அமைகின்ற குருப் பெயர்ச்சி லாபஸ்தானமாகிய 11 ஆம் இடம் அமைவது எல்ல  வகையிலும் நன்மைகள் கொடுக்கும் நிலை அமையும் தொழில் நிலை லாபங்கள் மேன்மையுறும் உங்களின் ராசிக்கு 26. 12. 2020 அன்று அமையும் சனிப் பெயர்ச்சி லாபஸ்தானமாகிய 11 ஆம் இடம் அமைவது அனுகூலமான  நன்மைகள் கொடுக்கும் எல்ல வகையிலும் ஆண்டின் பிற்பகுதி உங்கள் ராசிக்கு சிறப்பான பலன்களைக் கொடுக்கும். இந்த ஆண்டில் 65 %  நன்மைகள் அமையும்.

 துன்னையூர் காலநிதி ராம். தேவலோகேஸ்வரக் குரு

முக்கிய செய்திகள்

icon-left
icon-right