23.12.2015 மன்மத வருடம் மார்கழி மாதம் 07ஆம் நாள் புதன்கிழமை

Published on 2015-12-23 09:17:24

சுக்கிலபட்ச திரயோதசி திதி முன்னிரவு 8.04 வரை. பின்னர் சதுர்த்தி திதி. கார்த்திகை நட்சத்திரம் பகல் 2.40 வரை. அதன் மேல் ரோகிணி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை திரயோதசி. அமிர்த சித்தயோகம். பிரதோஷவிரதம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் சித்திரை, சுவாதி. சுபநேரங்கள் காலை 9.15 – 10.15, பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகுகாலம் 12.00 – 1.30, எமகண்டம் 7.30 – 9.00, குளிகை காலம் 10.30 – 12.00, வாரசூலம் – வடக்கு (பரிகாரம் – பால்) 

மேடம் : வெற்றி, புகழ்

இடபம் : அமைதி, நிம்மதி

மிதுனம் : புகழ், பெருமை

கடகம் : பகை, விரோதம்

சிம்மம் : அமைதி, தெளிவு

கன்னி : சினம், பகை

துலாம் : உற்சாகம், வரவேற்பு

விருச்சிகம் : சலனம், சஞ்சலம்

தனுசு : நிறைவு, பூர்த்தி

மகரம் : பகை, விரோதம்

கும்பம் : வெற்றி, அதிர்ஷ்டம்

மீனம் : பக்தி, ஆசி

மார்கழி திருப்பாவை 07ம் பாசுரம் “கீச்கீ சென்றெங்கும் ஆனைச்சாத்தன் பேசின பேச்சரவம் கேட்டிலையோ?” புத்தி பேதலித்தவளே வலியன் என்னும் கரிச்சான் குருவிகள் இரை தேடுமுன் ஒன்றோடு ஒன்று பேச்சரவத்தை கேட்கவில்லையா? நறுமணம் வீசும் கூந்தலுடைய ஆய்சியர்கள் அணிந்துள்ள அச்சுத்தாலி, ஆமைத்தாலி இவை உரசி கலகலவென்று ஒலிக்க, கைகளை வீச மத்தினால் தயிர்கடையும் ஓசை உன் காதுகளில் விழவில்லையா. தலைமை தாங்கும் மங்கையே! நாராயணனாகிய கேசவ மூர்த்தியை நாங்கள் பாடுவதைக் கேட்டும் நீ படுத்து உறங்குகிறாயே. முதலில் கதவைத்திற. 

புதன் கேது கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 2 – 1 – 5 

பொருந்தா எண்கள்: 8 – 7 

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  வெளிரான நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)