10.06.2016 துர்முகி வருடம் வைகாசி மாதம் 28 ஆம் நாள் வெள்ளிக்கிழமை
Published on 2016-06-10 10:30:18
சுக்கில பட்ச சஷ்டி திதி பின்னிரவு 3.51 வரை. பின்னர் ஸப்தமி திதி ஆயில்யம் நட்சத்திரம் பகல் 12.25 வரை. பின்னர் மகம் நட்சத்திரம் சிரார்த்த திதி வளர்பிறை சஷ்டி. மரண யோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் உத்திராடம், திருவோணம். சுபநேரங்கள் காலை 9.30– 10.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 10.30– 12.00, எமகண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30– 9.00, வார சூலம் மேற்கு (பரிகாரம் – வெல்லம்) சுக்கிலபட்ச சஷ்டி விரதம் முருகப் பெருமானை வழிபடல் நன்று. சோமாசி மாற நாயனார் குருபூஜை.
மேடம்: லஷ்மீகரம், தனம்
இடபம்: சுபம், யோகம்
மிதுனம்: அமைதி, தெளிவு
கடகம்: அன்பு, ஆசை
சிம்மம்: உயர்வு, மேன்மை
கன்னி: புகழ், பெருமை
துலாம்: லாபம், லஷ்மீகரம்
விருச்சிகம்: அன்பு, ஆதரவு
தனுசு: இரக்கம், ஈகை
மகரம்: மகிழ்ச்சி, பிரிதி
கும்பம்: பக்தி, அனுக்கிரகம்
மீனம்: அன்பு, பாசம்
திருமழிசையாழ்வார் அருளிச் செய்த “திருச்சந்த விருத்தம்” பாசுரம் 33. மின்னிறத் தெயிற்றரகன் வீழ வெங்சரம் துரந்து பின்னவற்கு அருள் துரந்து மன்னுசீர் பொன்னி றத்தவண்ணனாய புண்டரிக னல்லையே? பொருளுரை மின்னலைப் போல ஒளி வீசும் பற் களையடைய இராவணன் மடியும்போது அவன் மேல் கொடிய அம்புகளை எய்து அவன் இளவலான விபீஷணனுக்கு அருள் பரிந்து அரசைக் கொடுத்த பெருமையடையவனே! நல்ல நிறமும் இனிய பேச்சும் கொண்ட உன்னுடைய நம்பிள்ளைக்கு நாயகனே! எப்போதும் கல்யாண குணங்களையுடைய தங்கம் போன்ற நிறம் கொண்ட புண்டரீகனல்லவோ நீ! (ஆழ்வார் திருவடிகளே சரணம்)
(“மனதைக் கட்டுப்படுத்தினால் அது நம்மோடு நிற்கும் விட்டு விட்டால் அது நம்மை விட்டு ஓடிவிடும்”)
சூரியன் கேது கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 5, 6
பொருந்தா எண்கள்: 8, 7
அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, மங்சள், பொன்னிறம்
இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)