09.06.2016 துர்முகி வருடம் வைகாசி மாதம் 27 ஆம் நாள் வியாழக்கிழமை

Published on 2016-06-09 08:46:09

சுக்கிலபட்ச பஞ்சமி திதி பின்னிரவு 3.36 வரை. அதன்மேல் சஷ்டி திதி, பூசம் நட்சத்திரம் பகல் 11.46 வரை. பின்னர் ஆயிலியம் நட்சத்திரம், சிரார்த்த திதி, வளர்பிறை, பஞ்சமி, அமிர்த சித்தயோகம் மேல்நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  பூராடம், உத்திராடம். சுபநேரங்கள் காலை 10.30 – 11.30, பிற்பகல் 12.30 – 1.30, ராகு  காலம் 1.30 – 3.00, எமகண்டம் 6.00 – 7.30, குளிகை காலம் 9.00 – 10.30, வாரசூலம் – தெற்கு (பரிகாரம் – தைலம்). வளர்பிறை, சுபமூகூர்த்த நாள். பூசம் வியாழக்கிழமை. தேவகுரு பிரகஸ்பதியை வழிபடல் நன்று.

மேடம்: சுகம், ஆரோக்கியம்

இடபம்: வெற்றி, புகழ்

மிதுனம்: அன்பு, ஆதரவு

கடகம்: புகழ், பெருமை

சிம்மம்: லாபம், லஷ்மீகரம்

கன்னி: அமைதி, தெளிவு

துலாம்: நலம், ஆரோக்கியம்

விருச்சிகம்: நட்பு, உதவி

தனுசு: உயர்வு, மேன்மை

மகரம்:  சுகம், இன்பம்

கும்பம்: மகிழ்ச்சி, சந்தோஷம்

மீனம்: நம்பிக்கை, திடம்

திருமழிசையாழ்வார் அருளிச் செய்த திருச்சந்த விருத்தம். "குறக்கினப் படை கொடு குரை கடலின் மீது போய் பரக்கவைத் தளந்து கொண்ட பம்ம பாதான் அல்லையே!" பொருளுரை: குரங்கு படைகளைத் துணையாக கொண்டு ஆர்ப்பரிக்கும் கடலை அணைக்கட்டி, இலங்கை சென்று அரக்கர்கள் அஞ்சும்படி கொடிய பாணங்களைச் செலுத்திய மாவீரன் நீ. நீ வாமனனாய்ச் சென்று யாசிக்க உனக்கு மூன்றடி நிலம் கொடுத்த மகாபலிக்கு இருக்க ஓர் அடி நிலம் கூட இல்லாமல் உன் திருவடியை அகலமாக்கி அளந்து கொண்ட தாமரைப் பாதங்கள் உடையவன் நீ.

(ஆழ்வார் திருவடிகளே சரணம்) 

(‘ஒரு சொல் போதுமானால் இரு சொற்களை செலவு செய்யாதே. எவ்வளவு சொல்லியும் பயனில்லை என்றால் ஒரு சொல்லையும் விரையமாக்காதே.')

செவ்வாய், சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

பொருந்தா எண்கள்: 2, 3, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: அடர் பச்சை, நீலம்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)