08.06.2016 துர்முகி வருடம் வைகாசி மாதம் 26 ஆம் நாள் புதன்கிழமை

2016-06-08 08:39:46

சுக்கிலபட்ச சதுர்த்தி திதி பின்னிரவு 3.50 வரை. அதன்மேல் பஞ்சமி திதி, புனர்பூசம் நட்சத்திரம் பகல் 11.37 வரை. பின்னர் பூசம் நட்சத்திரம், சிரார்த்த திதி, வளர்பிறை, சதுர்த்தி, சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் மூலம், பூராடம். சுபநேரங்கள் காலை 9.30 – 10.30, மாலை 4.30 – 5.30, ராகு  காலம் 12.00 – 1.30, எமகண்டம் 7.30 – 9.00, குளிகை காலம் 10.30 – 12.00, வாரசூலம் – வடக்கு (பரிகாரம் –  பால்). நமிநந்தியடிகள் நாயனார் சேர்கிழார் பெருமான் குருபூஜை  தினம். சித்தயோகம், சுபமுகூர்த்த நாள்.

மேடம்: தடை, இடையூறு

இடபம்: தாமதம், கவலை

மிதுனம்: களிப்பு, மகிழ்ச்சி

கடகம்: அன்பு, இரக்கம்

சிம்மம்: உயர்வு, மேன்மை

கன்னி: சுகம், ஆரோக்கியம்

துலாம்: லாபம், லஷ்மீகரம்

விருச்சிகம்: புகழ், பெருமை

தனுசு: அமைதி, தெளிவு

மகரம்: வெற்றி, யோகம்

கும்பம்: தனம், சம்பத்து

மீனம்: நற்செயல், பாராட்டு

திருமழிசையாழ்வார் அருளிச் செய்த திருச்சந்த விருத்தம் "பாசுரம் 31" "காலநேமி காலனே! கணக்கிலாத  கீர்த்தியால் வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர! நின் பாலராய பக்தர் சித்தம் முத்தி செய்யும் மூர்த்தியே" பொருளுரை: இராவணனின் மாமன் காலநேமி, அசுரனுக்கு காலனானவனே! அளவற்ற புகழுடையவனே! ஏழு உலகங்களையும் அமுது செய்து ஆலிலை மேல் குழந்தை வடிவெடுத்த துவாரகா கண்ணனே! இராமாவதாரத்தில் கடல் நீர் கொந்தளிக்கும்படி கோதண்டத்தை வளைத்த வெற்றி பெறும் கோபத்தையுடைய ரத வீரனே! அடியவர்களின் மனதை வேறொன்றில் பற்றில்லாமல் செய்யும் பெருமையுடையவனே! (ஆழ்வார் திருவடிகளே சரணம்) 

(‘நமது செல்வத்தை விட நம் செல்வாக்கு தான் எப்போதும் உயர்வானதும் மேலானதுமாகும்”)

சனி, புதன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 8, 7

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம், பச்சை

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right