06.06.2016 துர்­முகி வருடம் வைகா­சி­மாதம் 24 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை

Published on 2016-06-06 09:35:26

சுக்கிலபட்ச பிரதமை திதி காலை 7.22 வரை. அதன் மேல் துவிதிதியை திதி பின்னிரவு 5. 46 வரை. பின்னர் திரிதியை திதி. (திதி அவமாகம்) மிருகசீரிடம் நட்சத்திரம் பகல் 12.39 வரை. பின்னர் திருவாதிரை நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை துவிதியை. அமிர்தசித்தயோகம். சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் அனுஷம், கேட்டை. சுபநேரங்கள் காலை 6.30– 7.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 7.30– 9.-00, எமகண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வாரசூலம் கிழக்கு (பரிகாரம் -– தயிர்) இன்று சந்திர தரிசனம் நன்று.

மேடம்: லாபம், லஷ்மீகரம்

இடபம்: பணிவு, பாசம்

மிதுனம்: அன்பு இரக்கம்

கடகம்: புகழ், பெருமை

சிம்மம்: பாசம், அன்பு

கன்னி: உதவி, நட்பு

துலாம்: சாந்தம், அமைதி

விருச்சிகம்: பகை, விரோதம்

தனுசு: நோய், வருத்தம்

மகரம்: கீர்த்தி, செல்வாக்கு

கும்பம்: நிறைவு, பூர்த்தி

மீனம்: கோபம், சினம்

திருமழிசையாழ்வார் அருளிச்செய்த “திருச்சந்த விருத்தம்” பாசுரம் 29. பரித்திலும் பரத்தையாதி பௌவ நீரணைக் கிடந்து ஒருத்தரும் நினாது தன்மை இன்ன தென்ன வல்லரோ-?. பொருளுரை: துவாரகா நிலைய வாசனே! கீதாச்சாரியனான பெருமானே! உயர்ந்த வற்றுக்குள்ளும் உயர்வாய் இருப்பவனே! கடலைப் பெருமைப்படுத்த, நாகராஜனுக்கு கீர்த்தி கிடைக்க பாற்கடலில் அனந்தாழ்வான் மீது பள்ளி கொண்டாய். திருமார்பில் பிருகு குமாரிக்கு மகிழ்ச்சியோடு இடம் தந்தாய். நரமனிதர்களை உய்விக்க ஸ்ரீ இராமனாக, கிருஷ்ணனாக அவதரித்தாய். உனது அருள் புரியும் தன்மையை யாரால் அளவிட்டு சொல்லமுடியும். (ஆழ்வார் திருவடிகளே சரணம்) 

(“விளம்பரத்திற்காகச் செய்யப்படும் தானமும் பக்தியும் உகந்ததல்ல”)

சுக்கிரன், குரு கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்: 9

பொருந்தா எண்கள்: 3, 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, மஞ்சள் கலந்த வர்ணங்கள்.

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)