04.06.2016 துர்முகி வருடம் வைகாசி மாதம் 22ம் நாள் சனிக்கிழமை

2016-06-06 09:36:42

கிருஷ்ணபட்ச சதூர்த்தசி திதி பகல் 11.23 வரை. அதன் மேல் அமாவஸ்ஸை திதி. கார்த்திகை நட்சத்திரம் பகல் 2.58 வரை. பின்னர் ரோகினி நட்சத்திரம். சிரார்த்த திதி அமாவாஸ்யை அமிர்த யோகம். கீழ்நோக்குநாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் சுவாதி விசாகம்,  சுபநேரங்கள்: 10.30 –11.30, மாலை 4.30 – 5.30, ராகுகாலம் 9.00 – 10.30, எமகண்டம் 1.30 – 3.00, குளிகை காலம் 6.00 – 7.30. வாரசூலம்–கிழக்கு (பரிகாரம் – தயிர்) ஸர்வ அமாவாஸ்யை பிதிர் தர்ப்பனம் செய்தல் நன்று. அமாவாஸ்யை விரதம்.

மேடம் : அமைதி, தெளிவு

இடபம் :  சிரமம், தடை

மிதுனம் :  கவனம், எச்சரிக்கை

கடகம் :  உயர்வு, மேன்மை

சிம்மம் :  பகை, விரோதம்

கன்னி : வரவு, லாபம்

துலாம் : திறமை, முன்னேற்றம்

விருச்சிகம் : அன்பு, பாசம்

தனுசு : கஷ்டம், கவலை

மகரம் : உழைப்பு, உயர்வு

கும்பம் : பணிவு, உயர்வு

மீனம் : களிப்பு, மகிழ்ச்சி

திருமழிசையாழ்வார் அருளிச்செய்த திருச் சந்த விருத்தம் பாசுரம் 27. விண்கடந்த சோதியாய் விளங்கும் ஞான மூர்த்தியாய் மண்கடந்த வண்ண நின்னையார் மதிக்க வல்லரே.! பொருளுரை – வாமன பிரம்மச்சாரியாய் மகாபலியிடம் சென்று மூன்றடி நிலம் யாசித்து விஸ்வரூபம் எடுத்தவனே! ஆகாயத்தைக் கடந்து ஜோதியாய் நின்றவனே! குரு சேத்திரத்தில் பார்தனுக்னு ஞான குருவாய் கீதோபதேசம் செய்தவனே. வைகுந்தத்தில் வாசம் செய்து பாபங்களை நாசம் செய்யும் பரந்தாமனே! எண்ண முடியாத உன் கல்யாண குணங்களை மதிப்பிட எவரால் முடியும்?.  (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

(“நம்பிக்கை, நன்னடத்தை, நல்லொழுக்கம், நல்லுறவு இவையே வெற்றிபெற வழிகள்”)

ராகு, சூரியன் ஆதிக்க கொண்ட இன்று

அதிர்ஷ்ட எண்கள்:  1, 5, 6

பொருந்தா எண்கள்: 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம் சிகப்பு

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right