03.06.2016 துர்முகி வருடம் வைகாசி மாதம் 21 ஆம் நாள் வெள்ளிக்கிழமை

Published on 2016-06-03 07:53:06

கிருஷ்ணபட்ச திரயோதசி திதி பகல் 1.42 வரை. பின்னர் சதுர்த்தசி திதி. பரணி நட்சத்திரம். மாலை 4.28 வரை. பின்னர் கார்த்திகை நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை திரயோதசி, சதுர்த்தசி. கீழ்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் சித்திரை, சுவாதி. சுபநேரங்கள் காலை 9.30 – 10.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 10.30 – 12.00, எமகண்டம் 3.00 – 4.30, குளிகை காலம் 7.30 – 9.00, வாரசூலம் – மேற்கு (பரிகாரம் – வெல்லம்) (வாஸ்து நாள். கார்த்திகை விரதம், கழற்சிங்கர் நாயனார் குருபூஜை)

மேடம்: நன்மை, அதிர்ஷ்டம்

இடபம்: புகழ், பெருமை

மிதுனம்: லாபம், லக் ஷ்மீகரம்

கடகம்: புகழ், பெருமை

சிம்மம்: அமைதி, தெளிவு

கன்னி: ஈகை, புண்ணியம்

துலாம்: முயற்சி, முன்னேற்றம்

விருச்சிகம்: உயர்வு, மேன்மை

தனுசு: வெற்றி, அதிர்ஷ்டம்

மகரம்: திடம், நம்பிக்கை

கும்பம்: தெளிவு, நம்பிக்கை

மீனம்: நட்பு, உதவி

திருமழிசையாழ்வார் அருளிச்செய்த "திருச்சந்த விருத்தம்" பாசுரம் 28. “ ஆணிணோடு பெண்ணுமாகி அல்லவோடு நல்லவாய்” உலகம் விருத்தியடைய ஆணாக, பெண்ணாக, அலியாக பிறப்பவர்களை பாதுகாப்பவனே. நல்லவர்களுக்கு துணையாக இருப்பவனே! ஜீவராசிகளுக்கு உணவின் சுவையாக, கேட்கும் ஓசையாக, ஸ்பரிச உணர்ச்சியாக இருப்பவனே. மாயையாக கலந்திருப்பவனே. பசுக்களை ஆதரிக்கும் மாயனாகி பகாசுரன், அகாசுரன், இந்திரன் இவர்களிடமிருந்து பசுக்களை காக்க மாயையுடன் செயற்பட்டாய். துரியோதனிடம் பொய்யாக உறவாடி பாண்டவர்களிடம் உண்மையாக நட்பு கொண்டு மூன்றடி பூமியைச் சிறிய பாதங்களைக் கொண்டு வாமனனாக இரந்து பெரிய திருவடியைக் கொண்ட திரிவிக்கிரமனாய் அளந்து கொண்டவனே உன் சேஷ்டிதங்களை யாரால் அறிய முடியும்? (ஆழ்வார் திருவடிகளே சரணம்)  

(“நம்பிக்கையும் அன்பும் ஆத்மாவின் தாய்ப்பால்”)

குரு, செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9, 3 

பொருந்தா எண்கள்: 6, 2, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்,இளஞ்சிவப்பு

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)