02.06.2016 துர்முகி வருடம் வைகாசி மாதம் 20 ஆம் நாள் வியாழக்கிழமை

Published on 2016-06-02 07:36:37

கிருஷ்ணபட்ச துவாதசி திதி மாலை 4.07 வரை. அதன்மேல் திரயோதசி திதி.  அஸ்வினி நட்சத்திரம் மாலை 6.05 வரை. பின்னர் பரணி நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை துவாதசி. அமிர்தசித்தயோகம். சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் அஸ்தம், சித்திரை. சுபநேரங்கள் பகல் 10.30 – 11.30, பிற்பகல் 12.30– 1.30, ராகு காலம் 1.30 – 3.00, எமகண்டம் 6.00 – 7.30, குளிகை காலம் 9.00 – 10.30, வாரசூலம் – தெற்கு (பரிகாரம் – தைலம்) கிருஷ்ணபட்ச மஹாபிரதோஷம் – சந்தியா காலத்தில் சிவ வழிபாடு சிறப்புடையது.

மேடம்: பகை, விரோதம்

இடபம்: அமைதி, சாந்தம்

மிதுனம்: வரவு, லாபம்

கடகம்: மகிழ்ச்சி, கொண்டாட்டம்

சிம்மம்: திடம், நம்பிக்கை

கன்னி: அமைதி, தெளிவு

துலாம்: களிப்பு, கொண்டாட்டம்

விருச்சிகம்: கஷ்டம், கவலை

தனுசு: புகழ், பாராட்டு

மகரம்: அன்பு, ஆதரவு

கும்பம்: பிரயாணம், அலைச்சல்

மீனம்: சுபம், மங்களம்

திருமழிசையாழ்வார் அருளிச்செய்த "திருச்சந்த விருத்தம்" பாசுரம் 27. “ வரத்தில் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன் உரத்தினில் கரத்தை வைத்து உதிர்த்தலத்தை ஊன்றினாய். இரத்தி இது என்ன பொய்? இறந்த மான் வயிற்றுள்ளே கரத்தின் உன் கருத்தையாவர் காணவல்லர் கண்ணனே. பொருளுரை: துவாரகா கண்ணனே! பிரம்மனிடம் அதிக வரத்தைப் பெற்று அகந்தை கொண்ட கோரைப் பற்களையுடைய இருணிய கசிபுவின் மார்பில் உனது கரத்தை வைத்து கிழித்துக் கொன்றாய். இவ்வளவு ஆற்றல் கொண்ட நீ மகாபலியிடம் மூன்றடி நிலம் கேட்டு யாசகம் செய்தாய். என்னவொரு ஆச்சரியமான பொய்? பிரளய காலத்தில் ????? எல்லாம் உன் வயிற்றில் அடக்கினாய்! உன் எண்ணங்களை அறிய யாரால் முடியும்.

(“விடவேண்டியதை விட்டுவிட்டால் பெற வேண்டியது அனைத்தும் உன் கண்களுக்கு புலப்படும்”)

சந்திரன், சனி கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 7, 1, 5, 6 

பொருந்தா எண்கள்: 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)