26.05.2016 துர்முகி வருடம் வைகாசி மாதம் 13 ஆம் நாள் வியாழக்கிழமை

Published on 2016-05-26 06:54:51

கிருஷ்ணபட்ச சதுர்த்தி திதி காலை 5.57 வரை. அதன்மேல் பஞ்சமி திதி பின்னிரவு 5.27 வரை. பின்னர் சஷ்டி திதி திதிஅவமகம். உத்தராடம் நட்சத்திரம் பின்னிரவு 1.48 வரை. பின்னர் திருவோனம் நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை பஞ்சமி.  சித்தயோகம் மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் திருவாதிரை, புனர்பூசம். சுபநேரங்கள் காலை11.30 – 12.00, பிற்பகல்12.30 –1.30, ராகு காலம் 1.30 – 3.00, எமகண்டம் 6.00 – 7.30, குளிகை காலம் 9.00 – 10.30, வாரசூலம் – தெற்கு. (பரிகாரம் –  தைலம்). சுபமுகூர்த்த நாள்.

மேடம்: பகை, விரோதம் 

இடபம்: வெற்றி, அதிர்ஷ்டம் 

மிதுனம்: நன்மை, யோகம் 

கடகம்: போட்டி, ஜெயம் 

சிம்மம்: உயர்வு, மேன்மை 

கன்னி: புகழ், பாராட்டு 

துலாம்: நோய், வருத்தம்

விருச்சிகம்: தனம், சம்பத்து 

தனுசு: களிப்பு, மகிழ்ச்சி 

மகரம்: பாசம், அன்பு 

கும்பம்: லாபம், லஷ்மீகரம் 

மீனம்: அமைதி, தெளிவு 

திருமழிசையாழ்வார் அருளிச் செய்த 'திருச்சந்த விருத்தம் 'பாசுரம் 18. "விடத்தவாய் ஓராயிரம் இராயிரங்கண் வெந்தழல் விடுத்து அராவணைப்படுத்த பாயப் பள்ளிகொள்வது என் கொல் வேலை வண்ணனே!" பொருளுரை: கடல்  நிறங் கொண்டவனே. தன் ஆயிரங் கண்களிலும் விஷம் புறப்பட ஒருக்காலும் உன்னிடம் இருந்து பிரிவில்லாத போகத்தையுடைய பேரொளி கொண்ட ஆதிசேடன் மீது பாற்கடலில் நீலக்கடல் சயனித்தது போல் ஆதிசேடனின் திரண்ட அழகுடைய படங்களே மேல் விதானமாய் இருக்க பள்ளிகொள்வது எதற்காக? (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

(“சண்டைக்கு இருவர் தேவை. நீங்கள் அவ்விருவராக இருக்காதீர்கள்”)

சனி, ராகு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

பொருந்தா எண்கள்: 8, 4

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)