23.05.2016 துர்முகி வருடம் வைகாசி மாதம் 10 ஆம் நாள் திங்கட்கிழமை

Published on 2016-05-23 09:35:51

கிருஷ்பட்ச துவிதியை திதி பின்னிரவு 5.35 வரை. பின்னர் திருதியை திதி. கேட்டை நட்சத்திரம் முன்னிரவு 11.32 வரை. அதன் மேல் மூலம் நடசத்திரம் சிரார்த்த திதி தேய்பிறை துவிதியை சித்தியோகம். சமநோக்குநாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் கார்த்திகை, ரோகினி. சுபநேரங்கள் காலை 9.30– 10.30, மாலை 4.30– 5.30, ராகுகாலம் 7.30– 9.00, எமகண்டம் 10.30– 12.00 குளிகை காலம் 1.30, 3.00 வார சூலம் கிழக்கு (பரிகாரம்– தயிர்)

மேடம்: உயர்வு, மேன்மை

இடபம்: வெற்றி, யோகம்

மிதுனம்: சுகம், ஆரோக்கியம்

கடகம்: செலவு,விரயம்

சிம்மம்: அன்பு, பாசம்

கன்னி: போட்டி, ஜெயம்

துலாம்: நிறைவு, லாபம்

விருச்சிகம்: அன்பு, ஆதரவு

தனுசு: சினம், கோபம்

மகரம்: பாராட்டு, புகழ்

கும்பம்: அமைதி, தெளிவு

மீனம்: சுபம், மங்களம்

"திருமழிசையாழ்வார்" அருளிச்செய்த "திருச்சந்த விருத்தம்" பாசுரம் 15. "அங்கம் ஆறும் வேதம் நான்குமாகி நின்றவற்றுள்ளே சங்க வண்ணம் அன்னமேனி சார்ங்க பாணியல்லயே? " பொருளுரைப: சிட்சை, வியாகரணம், சந்தஸ், நிரக்தம், ஜோதிடம், கல்பம் ஆகிய ஆறு அங்கங்களும் இருக்கு, யசூர், சாமம், அதர்வணம் என்கிற நான்கு வேதங்களுக்கும் தலைவனாக இருப்பவனே திருப்பாற்கடலின் ஆதிசேஷன் என்கிற படுக்கையிலேயே கண் வளர்ந்தருளும் வேதத்தின் உட்பொருளே திருக்கல்யாண குணங்களை உடையவனே, கிருதை யுகத்தில் சங்தவண்ண மேனியை உடைய நீ திரேதா யுகத்தில் சார்ங்க மென்னும் வில்லைத் தரித்த ஸ்ரீ இராமனாக அவதரித்தாயே.

 "ஆழ்வார் திருவடிகளே சரணம்"

(‘இளமையில் சேமிப்பதை முதுமையில் செலவு செய்')

புதன், சூரியன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 6, 8, 1

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)