22.05.2016 துர்முகி வருடம் வைகாசி மாதம் 09 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை

Published on 2016-05-22 09:05:04

கிருஷ்ணபட்ச பிரதமை திதி பின்னிரவு 4.36 வரை. அதன்மேல் துவிதியை திதி. அனுஷம் நட்சத்திரம் முன்னிரவு 7.48 வரை. பின்னர் கேட்டை நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை. பிரதமை மரணயோகம். சமநோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் பரணி, கார்த்திகை. சுபநேரங்கள்: காலை 7.30 – 8.30, பகல் 10.30 – 11.30, ராகுகாலம் 4.30 – 6.00, எமகண்டம் 12.00 – 1.30,  குளிகைகாலம் 3.00 – 4.30, வாரசூலம் – மேற்கு (பரிகாரம் – வெல்லம்) 

மேடம்: வெற்றி, யோகம்

இடபம்: நன்மை, அதிர்ஷ்டம்

மிதுனம்: புகழ், பெருமை

கடகம்: புகழ், பாராட்டு

சிம்மம்: உயர்வு, மேன்மை

கன்னி: உயர்வு, செல்வாக்கு 

துலாம்: பொறுமை, அமைதி 

விருச்சிகம்: அசதி, வருத்தம்

தனுசு: பரிவு, பாசம்

மகரம்: சினம், அவமானம்

கும்பம்: தனம், சம்பத்து

மீனம்: தொல்லை, சங்கடம்

திருமழிசையாழ்வார் அருளிய திருச்சந்த விருத்தம் பாசுரம் 14. “தூய்மை யோகமாயினாய்! துழாய் அயங்கல் மாலையாய் ஆமையாகி ஆழ்கூல் துயின்ற ஆதிதேவ” பொருளுரை: தூய்மையான யோக நித்திரை கொண்டவனே! துளசியினால் ஆன மாலையை அணிந்தவனே! மந்திர மாலையைத் தாங்க கூர்மாவதாரனாகி ஆழ்கடலில் உறங்கிய ஆதிதேவனே! உனது ஒவ்வொரு பெயருக்கும் ஒரு காரணமும் வரலாறும் உள்ளது. வரையறுத்து சொல்லும் ஆற்றல் எனக்கில்லை துவாரகா கண்ணனே. ஆயினும் சாம வேத கீதனாகிய சக்கரபாணி என்பதை உணர்கின்றேன். ஆழ்வார் திருவடிகளே சரணம்.

(“தன்னை அறிவதே அறிவு. தன்னை மறப்பது மடமை”)

ராகு, செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 1

பொருந்தா எண்கள்: 3, 8, 4, 1

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்.

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)