17.05.2016 துர்முகி வருடம் வைகாசி மாதம் 04ஆம் நாள் செவ்வாய்க்கிழமை

Published on 2016-05-17 08:36:55

சுக்கில பட்ச ஏகாதசி திதி முன்னிரவு 7.38 வரை. அதன் மேல் துவாதசி திதி. உத்தரம் நட்சத்திரம் காலை 9.46 வரை. பின்னர் அஸ்தம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை ஏகாதசி. அமிர்த சித்தயோகம். மேல் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் பூரட்டாதி. சுபநேரங்கள் காலை 7.30 – 8.30, 10.30 –11.30. மாலை 4.30 – 5.30. ராகுகாலம் 3.00 –  4.30. எமகண்டம் 9.00 – 10.30. குளிகை காலம் 12.00 – 1.30. வாரசூலம். வடக்கு (பரிகாரம் – பால்) இன்று ஸர்வ ஏகாதசி விரதம். இதற்கு மோகினி ஏகாதசி விரதம் என்று பெயர். தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைய, அமுதம் தோன்ற திருமால் மோகினி அவதாரமெடுத்து உலகை உய்வித்த புண்ணியதினம். இன்று திருமாலை வழிபடல் நன்று. புதன் ஜெயந்தி நவக்கிரகங்களில் வித்யாகாரகன் புதன் வழிபாடு இயற்ற கல்வி வளம் பெருகும்.

மேடம் :  செலவு, சிக்கனம்

இடபம் :  வரவு, லாபம்

மிதுனம் :  லாபம், லஷ்மிகரம்

கடகம் :  ஜெயம், புகழ்

சிம்மம் :  பகை , பயம்

கன்னி : அன்பு, ஆதரவு

துலாம் : உதவி, நட்பு

விருச்சிகம் : புகழ், பெருமை

தனுசு : போட்டி, ஜெயம்

மகரம் : ஆக்கம், நிறைவு

கும்பம் : உழைப்பு, உயர்வு

மீனம் : மகிழ்ச்சி, சந்தோஷம்

திருமழிசையாழ்வார் அருளிச் செய்த “திருச்சந்தவிருத்தம்” பாசுரம் 11 “சொல்லினால் தொடர்ச்சி நீ சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற ஜோதி நீ” பொருளுரை – நாராயணா! வேத மந்திரங்களால் சந்நியாசிகளுக்கு உலக உறவை ஏற்படுத்துபவனே.ஸ்தாத்திரங்களின் பொருளானவனே அளவிட்டு அறிய முடியாத ஜோதிக்காக தோன்றுபவனே உன்நாபிக்கமலத்தின் உற்பத்தியாகிய பிரம்மனிடம் அரூபமாக இருந்து உலகைப் படைத்தவனே உன் பிரபாவங்களை சுருக்கமாக சொல்ல எவரால் ஆகும்? (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

(“சந்தன மரமென்பது தன்னை வெட்டிச் சிதைக்கும் கோடரிக்கும் வாசனை கொடுக்கும்”)

சனி, ராகு முதலான கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

பொருந்தா எண்: 8, 4

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம் 

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)