இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (27.09.2020)..! 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..

Published on 2020-09-27 09:07:31

27.09.2020 சார்­வரி வருடம் புரட்டாதி மாதம் 11 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை

திதி : சுக்கில பட்ச நவமி திதி முன்னிரவு 10.38 வரை. அதன் மேல் துவாதசி திதி. திருவோணம் நட்சத்திரம். சிதார்த்த திதி வளர்பிறை ஏகாதசி. அமிர்த்த யோகம். மேல் நோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள் -  திருவாதிரை, புனர்பூசம்

சுப நேரங்கள் காலை 10.45 - 11.45, மாலை 03.15- 04.15,  ராகுகாலம் 04.30 - 06.00, எமகண்டம் 12.00 - 1.30, குளிகை காலம் 03.30 - 4.30

வாரசூலம் - மேற்கு, பரிகாரம் - வெல்லம்

மேடம் – ஆதாயம், லாபம்

இடபம் – சுகம், ஆரோக்கியம்

மிதுனம் – ரோகம், மருந்துவச் செலவு

கடகம் –  காரிய சித்தி, அனுகூலம்

சிம்மம் – உயர்வு, மேன்மை

கன்னி – லாபம், லஷ்மிகரம்

துலாம் – அச்சம், பகை

விருச்­சிகம் – அன்பு, பாசம்

தனுசு – வராவு, லாபம்

மகரம் –  யோசனை

கும்பம் – நன்மை, அதிஷ்டம்

மீனம் – நன்மை, சுபச்செலவு

இன்று திருவோண விரதம். ஏகாதசி திதி, சுக்லபட்ச சர்வ ஏகாதசி விரதம். அந்த நாட்களில் முழு உபவாசம் இருந்து, மறுநாள் துவாதசியில், பூஜை முடித்த பின்பே காலை உணவு உட்கொள்ள வேண்டும்.  ஸ்ரீமன் நாராயணனை வழிபடல் சிறப்பு. இன்று விரதமிருந்து பெருமாளை வணங்கினால் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதிகம். 

'காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை; ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை’ என்பது ஆன்றோர் வாக்கு. 

சனி, செவ்வாய்  கிரகங்களின் ஆதிக்க நாளின்று. 

அதிஷ்ட எண்கள்         -  6,  5

பொருந்தாத எண்கள் - 8, 2

அதிஷ்ட வர்ணங்கள்  -  மஞ்சள், இளஞ்சிவப்பு, நீலம்

-இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்னு கோவில்)