16.05.2016 துர்முகி வருடம் வைகாசி மாதம் 3ம் நாள் திங்கட் கிழமை

2016-05-16 08:58:26

சுக்கில பட்ச தசமி திதி. மாலை 5.59 வரை அதன் மேல் ஏகாதசி திதி. பூரம் நட்சத்திரம் காலை 7.38 வரை. பின்னர் உத்தரம் நட்சத்திரம். சிரார்த்த திதி சூன்யம் சித்தயோகம். கீழ் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம். சதயம். சுபநேரங்கள் காலை 6.30 – 7.30, 9.30 –1030 மாலை 5.15 – 6.00 ராகுகாலம் 7.30 –  9.00. எமகண்டம் 10.30 – 12.00 குளிகை காலம் 1.30 – 3.00. வாரசூலம். கிழக்கு (பரிகாரம் – தயிர்) வாசவி ஜெயந்தி – சுபமுகூர்த்தம்.

மேடம் :  நற்செயல், பாராட்டு

இடபம் :  புகழ், பெருமை

மிதுனம் :  வரவு, இலாபம்

கடகம் :  பரிவு, பாசம்

சிம்மம் :  ஆதாயம், லாபம்

கன்னி : பக்தி, ஆசி

துலாம் : தனம், சம்பத்து

விருச்சிகம் : பேராசை, நஷ்டம்

தனுசு : முயற்சி, முன்னேற்றம்

மகரம் : அமைதி, தெளிவு

கும்பம் : விவேகம், வெற்றி

மீனம் : ஊக்கம், உயர்வு

திருமழிசையாழ்வார் அருளிச்செய்த “திருச்சந்த விருத்தம்” பாசுரம் பத்து “தன்னுளே திரைத்தெழும் தரங்க வெண் தடங்கள் நின்னுள்ளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே” பொருளுரை. கடலில் வீசுகின்ற காற்றினால் அலையடிக்கின்றது. காற்று நின்றால் அலை அடங்கிவிடும். அதுபோல் எம்பெருமானே! துவாரகா நாதா! உன் வடிவத்துக்குள் தோன்றி அழியும் பொருள், மலைமுதலான அசையாப் பொருட்கள், பறவை, விலங்கு, மனிதர் போன்ற அசையும் உயிர்கள் அனைத்தும் உன்னுள் அடங்கிவிடும். அற்புதமே அற்புதம். (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

(“பிறர் தூக்கிவிட்டு மேலே போகின்றவன் விரைவில் கீழே விழுந்துவிடுவான். நீயே முயன்று உன் அறிவாலும் உழைப்பாலும் உன் எதிர்கால மாளிகையை உருவாக்கிக் கொள்”)

கேது, குரு கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று

அதிர்ஷ்ட எண்கள்:  2, 3, 5, 1

பொருந்தா எண்கள்: 7, 8, 6

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம் 

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right