15.05.2016 துர்முகி வருடம் வைகாசி மாதம் 02 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை

Published on 2016-05-16 08:57:10

சுக்கில நவமி திதி மாலை 4.45 வரை. அதன் மேல் தசமி திதி பூரம் நட்சத்திரம் நாள் முழுவதும். சிரார்த்த திதி சூன்யம். கீழ் நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் அவிட்டம். சுபநேரங்கள் காலை 7.30 – 8.30, பிற்பகல் 1.30 – 3.30  ராகு காலம் 4.30 – 6.00, எமகண்டம் 12.00 – 1.30, குளிகை காலம் 3.00 – 4.30, வாரசூலம் – மேற்கு (பரிகாரம் –  வெல்லம்) நட்சத்திர திரிதினஸ்பிருக்கு.

மேடம்: நன்மை, அதிர்ஷ்டம்

இடபம்: செலவு, விரயம்

மிதுனம்: ஆதாயம், லாபம்

கடகம்:  சுகம், ஆரோக்கியம்

சிம்மம்: பணிவு, பாசம்

கன்னி: புகழ், பெருமை

துலாம்: தடை, தாமதம்

விருச்சிகம்: லாபம், லக் ஷ்மீகரம்

தனுசு: அச்சம், பகை

மகரம்: பகை, விரோதம்

கும்பம்: அன்பு, ஆதரவு

மீனம்: வெற்றி, யோகம்

திருமழிசையாழ்வார் அருளிய "திருச்சந்த விருத்தம்" பாசுரம் 9 "தாதுலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன் நீதியால் வணங்குபாத நீர்மை நின்கண் தின்கண் நின்றதே"  பொருளுரை: மகரந்தப் பொடி நிறைந்த கொன்றை மலர் மாலையையும் சிவந்த ஜடா முடியுமுடைய சிவபெருமான் வேத விதிப்படி வணங்கும் பாதங்களையுடைய நிர்மலனே! நிறைய நற்குணங்களைக் கொண்ட வேத விற்பன்னர்கள் சாம வேதம் பாடி யாகங்களை செய்கின்றவர்கள் வேத விதிகளிலிருந்து பிறழாத கேள்வி ஞானம் கொண்டவர்கள் இவர்கள் எல்லாம் வேத முறைப்படி வணங்கும் பெருமையுடையவன் நீ ஒருவனே!  (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

(“உதவி பற்றி பேசுவோர் அதிகம். அதை செய்வோர் மிகக் குறைவு.”)

சுக்கிரன், சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 6, 7

பொருந்தா எண்கள்: 3, 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ்சிவப்பு

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)