14.05.2016 துர்முகி வருடம் வைகாசி மாதம் 1 ஆம் நாள் விருஷப மாதம் வைசாகம் ஜ்யேஷ்டம் சனிக்கிழமை

2016-05-14 11:24:02

சுக்கிலபட்ச அஷ்டம திதி மாலை 3.57 வரை. அதன் மேல் நவமி திதி மகம் நட்சத்திரம் பின்னிரவு 5.55 வரை. நட்சத்திர திரிதினஸ்பிருக்கு. கீழ்நோக்கு நாள் சந்திராஷ்டம திருவோணம். சிரார்த்த திதி சூன்யம். சுபநேரங்கள் காலை 7.30 – 8.30, பகல் 10.30– 11.30, மாலை 3.00 – 4.00. ராகு காலம் 9.00 – 10.30. எமகண்டம் 1.30 – 3.00. குளிகை காலம் 6.00 – 7.30, வாரசூலம் – கிழக்கு, பரிகாரம் – தயிர்) விஷ்ணு பதி புண்யகாலம்.

மேடம்: நன்மை, அதிர்ஷ்டம்

இடபம்: அமைதி, நிம்மதி

மிதுனம்: களிப்பு, கொண்டாட்டம்

கடகம்: சிக்கல், கவலை

சிம்மம்: பயம், விரோதம்

கன்னி: புகழ், பாராட்டு

துலாம்: ஜெயம், புகழ்

விருச்சிகம்: பணம், பரிசு

தனுசு: பிரிதி, மகிழ்ச்சி

மகரம்: நலம், ஆரோக்கியம்

கும்பம்: வெற்றி, யோகம்

மீனம்: நிறைவு, பூர்த்தி

திருமழிசையாழ்வார் அருளிய திருச்சந்த விருத்தம் பாசுரம் 8 “ஆதியான வான வர்க்கும் அண்டமாய அப்புரத்து ஆதியான காலநின்னை யாவர் காண வல்லரே?" பொருளுரை: படைப்பு தொழிலுக்கு காரணமான பிரம்மா, சப்தரிஷிகள் 12 ஆதித்யர்கள்  ஆகியோருக்கும் காக்கும் கடமையுள்ள இந்திரன் 14 மனுக்கள் ஆகியவர்களுக்கும் அழிக்கும் பொறுப்பில் உள்ள ருத்திரன், அக்னியமன் முதலானவர்களுக்கும் வைகுண்டத்திலுள்ள நித்ய சூரிகளுக்கும் நீயே அதிபதி. பிரளய காலத்தை உருவாக்கும் உன் பெருமைகளை முழுமையாக அறிய  யாரால் முடியும்? ஆழ்வார் திருவடிகளே சரணம்.

(“நீங்கள் மதிக்கப்பட வேண்டுமென்றால், மற்றவர்களை மதிக்கத் தெரிந்து கொள்ளுங்கள்”)

புதன், சூரியன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 6, 8, 9

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், சாம்பல் நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right