13.05.2016 துர்முகி வருடம் சித்திரை மாதம் 30ம் நாள் வெள்ளிக்கிழமை

2016-05-13 10:14:49

சுக்கிலபட்ச ஸப்தமி திதி மாலை 3.39 வரை. அதன் மேல் அஷ்டமி திதி. ஆயில்யம் நட்சத்திரம் பின்னிரவு 4.40 வரை. பின்னர் மகம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை ஸ்ப்தமி மரண யோகம். கீழ் நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் உத்தராடம். சுபநேரங்கள் காலை 9.30 – 10.30. பிற்பகல் 1.30 – 2.30 ராகு காலம் 10.30 – 12.00 எமகண்டம் 3.00 – 4.30 குளிகை காலம் 7.30 – 9.00 வார சூலம் – மேற்கு (பரிகாரம் – வெல்லம்) 

மேடம் :  கீர்த்தி, புகழ்

இடபம் :  நன்மை, யோகம்

மிதுனம் :  சிரமம், தடை

கடகம் :  நஷ்டம், கவலை

சிம்மம் :  கஷ்டம், கவலை

கன்னி : பக்தி, ஆசி

துலாம் : நட்பு, உதவி

விருச்சிகம் : அன்பு, பாசம்

தனுசு : வெற்றி, அதிர்ஷ்டம்

மகரம் : யோகம், அதிர்ஷ்டம்

கும்பம் : அமைதி, தெளிவு

மீனம் : மகிழ்ச்சி, சந்தோஷம் 

திருமழிசையாழ்வார் அருளிச் செய்த திவ்யபிரபந்தம் திருச்சந்த விருத்தம் பாசுரம் ஏழு “ஒன்றிரண்டு மூர்த்தியாய் உறக்கமோடு உணர்ச்சியாய் ஒன்றிரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே!” பொருளுரை – பரந்தாமா! நீ உயிர்களைக் காக்கும் திருமாலாய் உள்ளாய். பிறப்பு, இறப்பு இரு தொழில்களை செய்யும் பிரம்மா, ருத்திரன் ஆக உள்ளாய். மாயையாகும் உறக்கமும் நீயே! ஞானமான விழிப்பும் நீயே. சத்வ, ரஜஸ், தமஸ் மூவகைக்குணமும் நீயே!  கடந்த,நிகழ்,எதிர்காலமும் நீயே. ஆகவநீயம், காருகபத்தியம், தட்சிணாக்கினி என்று அக்னியாகவுள்ளாய் யாதவர் குலத்தில் வளர்ந்து மாயங்கள் செய்த துவாரகா கண்ணனும் நீயே! சூரியன், சந்திரன் என்ற இரு விழிகளோடு உள்ளாய். நெற்றிக்கண் கொண்ட ஈசனும் உன்னை போற்ற வல்லவனே”?  (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

“அதிர்ஷ்டம் எப்போதும் துணிவுள்ளவார்கள் பக்கமே நிற்கும்”

ராகு, செவ்வாய் கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட இன்று

அதிர்ஷ்ட எண்கள்:  5, 6, 3, 9

பொருந்தா எண்கள்: 2, 8, 4, 1

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்.

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right