11.05.2016 துர்முகி வருடம் சித்திரை மாதம் 28 ஆம் நாள் புதன்கிழமை

Published on 2016-05-11 07:31:38

சுக்கில பட்ச பஞ்சமி திதி 4.34   அதன்மேல் சஷ்டி திதி. புனர்பூசம் நட்சத்திரம் பின்னிரவு 3.42 வரை. பின்னர் பூசம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை. பஞ்சமி சித்தியோகம். சுபநேரங்கள் காலை 9.30– 10.30, மாலை 5.30– 6.00, ராகு காலம் 12.00– 1.30, எமகண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00, வார சூலம் வடக்கு (பரிகாரம் பால்) சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் மூலம். இன்று ஸ்ரீமத் ஆதி சங்கர ஜெயந்தி வளர்பிறை சுப முகூர்த்த நாள்.

மேடம்: அன்பு, சுபச் செய்தி

இடபம்: தனம், அனுகூலம்

மிதுனம்: எதிர்ப்பு, கலகம்

கடகம்: வெற்றி, சன்மானம்

சிம்மம்: கவனம், காரியநாசம் 

கன்னி: ஜெயம், நற்செய்தி

துலாம்: ஊக்கம், உயர்வு

விருச்சிகம்: அமைதி, தெளிவு

தனுசு: ஓய்வு, நற்செய்தி

மகரம்: மறதி, பொருள்விரயம்

கும்பம்: அன்பு, பாசம்

மீனம்: நற்செய்தி, அனுகூலம்

திருமழிசையாழ்வார் அருளிச் செய்த திருச்சந்த விருத்தம். பாசுரம் ஐந்து. நின்றியங்கும் ஒன்றலா உருக்கள் தோறும் ஆவியாய் அன்று நான்முகன் பயந்த ஆதி தேவன் அல்லையே? பொருளுரை அசையா பொருளாகிய மலை முதலியனவாகவும் அசையக்கூடிய பறவை மிருகம் முதலியவாகவும் எல்லாவற்றிலும் ஆத்மாவாய் கலந்து நிற்கும் உன்னை எக்காலத்திலும் ஞானியராலும் அளவிட முடியாது. ஆதி தேவனே! ஊழிக்காலத்தில் உனது ???????? பிரம்மனை தோற்றுவித்தவனே! உன் பெருமையை என்னைத் தவிர அறிய வல்லவர் எவர்?

(“சிறிதளவு பணம் உள்ளவன் ஏழையல்ல அதிகளவு ஆசை உள்ளவனே ஏழை”)

சந்திரன், கேது கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 1, 6

பொருந்தா எண்கள்: 9, 8, 7

அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிர் பச்சை, வெளிர் மஞ்சள்.

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)