10.05.2016 துர்­முகி வருடம் சித்­திரை மாதம் 27 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை

Published on 2016-05-10 09:19:30

சுக்­கில பட்ச சதுர்த்தி திதி மாலை 5.43 வரை. பின்னர் பஞ்­சமி திதி. திரு­வா­திரை நட்­சத்­திரம் பின்­னி­ரவு 3.55 வரை. பின்னர் புனர்­பூசம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை சதுர்த்தி. மரண யோகம். மேல் நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்– கேட்டை. சுப­நே­ரங்கள் காலை 7.30– 8.30, பகல் 10.30 –11.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 3.00– 4.30, எம­கண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30இ வார சூலம் வடக்கு (பரி­காரம் -–பால்) எம்­பெ­ரு­மானார் ஸ்ரீ இரா­மா­னுஜர் ஜெயந்தி தினம் சதுர்த்தி விரதம் விறல் மிண்டர் நாயனார் குரு­பூஜை.

மேடம் : இன்பம், மகிழ்ச்சி

இடபம் : அன்பு, இரக்கம்

மிதுனம் : உயர்வு, மேன்மை

கடகம் : நட்பு, உதவி

சிம்மம் : அன்பு, ஆத­ரவு

கன்னி :பிர­யாணம், அலைச்சல்

துலாம் :காரி­ய­சித்தி, அனு­கூலம்

விருச்­சிகம் : லாபம், லஷ்­மீ­கரம்

தனுசு : நற்­செயல், பாராட்டு

மகரம் :களிப்பு, கொண்­டாட்டம்

கும்பம் : சுகம், ஆரோக்­கியம்

மீனம் : தனம், சம்­பத்து

திரு­ம­ழி­சை­யாழ்வார் அருளிச்செய்த திருச்­சந்த விருத்தம் பாசுரம் – “மூன்று முப்­பத்­தா­றி­னோடு ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்­துமாய்”– பொரு­ளுரை– சமஸ்­கி­ருத எழுத்­துக்­களில் 33 மெய் எழுத்­துக்­களும் 16 உயிர் எழுத்­துக்­களும் “ள” கரம் முத­லிய 5 எழுத்­துக்­க­ளுக்கும் நீயே அதி­காரி. ரிக், யஜுர், சாமம் என்­கிற 3 வேதங்­களின் வடிவம் நீ. நான்கு மூன்­று­க­ளையும் இணைத்து பன்­னி­ரண்­டாக்கி “ஓம் நமோ பக­வதே வாசு­தே­வாய” என்­கிற துவா­தச அட்­ச­ர­மாகி அருள் புரி­ப­வனும் நீயே! அ, உ, ம என்­கிற மூன்றாய் பிரிந்து ஒன்றாய் ஒலிக்கும் பிர­ணவ ஜோதியும் நீயே! என்றும் அழி­வற்ற அறி­வாக விளக்­காக எனக்குள் நீ புகுந்­தது எதற்­காக? (ஆழ்வார் திரு­வ­டி­களே சரணம்)

(“அன்புச் சுவையை பருக விரும்­பினால் ‘நான்’ என்ற உணர்ச்­சியை துறக்க வேண்டும். ஒரே உறையில் இரண்டு வாள் இருக்க முடி­யாது”)

சூரியன்இ சுக்­கிரன் ஆதிக்­க­முள்ள இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

பொருந்தா எண்கள்: 3, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)