12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (13.03.2020 )..!

2020-03-13 08:50:03

13.03.2020 ஸ்ரீவி­காரி வருடம் மாசி மாதம் 30 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச சதுர்த்தி திதி பகல் 2.51 வரை. அதன்மேல் பஞ்­சமி திதி. சுவாதி நட்­சத்­திரம் முன்­னி­ரவு 7.43 வரை. பின்னர் விசாகம் நட்­சத்­திரம். திதித்­வயம். சிரார்த்த திதிகள் தேய்­பிறை சதுர்த்தி, பஞ்­சமி. சித்­த­யோகம். சம­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் உத்­தி­ரட்­டாதி, ரேவதி. சுப­நே­ரங்கள் காலை 9.30–10.30 மாலை 4.30–5.30 ராகு­காலம் 10.30–12.00 எம­கண்டம் 3.00–4.30 குளி­கை­காலம் 7.30–9.00. வார­சூ­லம்–­மேற்கு (பரி­காரம்– வெல்லம்) விவாக சுப­மு­கூர்த்த நாள்.

மேடம் : செலவு, பற்­றாக்­குறை

இடபம் : திறமை, முன்­னேற்றம்

மிதுனம் : பொறுமை, அமைதி

கடகம் : காரி­ய­சித்தி, பொருள்­வ­ரவு

சிம்மம் : மகிழ்ச்சி, உற்­சாகம்

கன்னி : சிக்கல், குழப்பம்

துலாம் : சோர்வு, அசதி

விருச்­சிகம் : அதிர்ஷ்டம், நன்மை

தனுசு : புகழ், பெருமை

மகரம் : நலம், ஆரோக்­கியம்

கும்பம் : விரயம், செலவு

மீனம் :அதிர்ஷ்டம், காரி­ய­சித்தி

தொண்­ட­ர­டிப்­பொ­டி­யாழ்வார் அரு­ளிய திரு­மாலை “மற்­றுமோர் தெய்­வ­முண்டே? மதி­யிலா மானி­டங்காள்! உற்ற போதன்றி நீங்கள் ஒரு­வ­னென்று உணர மாட்டீர். அற்­ற­மே­லொன்­றறீர். அவ­னல்லால் தெய்­வ­மில்லை. கற்­றினம் மேய்த்த எந்தை கழ­லிணை பணி­மின்­நீரே” மதி­கெட்ட மனி­தர்­களே! கன்­று­களை மேய்த்த துவா­ரகை கிருஷ்­ணனை தவிர வேறு தெய்­வ­முண்டோ? ஆபத்து வரும்­போது மட்டும் ஸ்ரீமன் நாரா­ய­ணனை நம்­பு­கி­றீர்கள். மற்ற சமயம் அவனை நினைப்­ப­தில்லை வேதப்­பொ­ருளே அவன்தான். அவ­னன்றி தெய்­வ­மில்லை. அவ­னது திரு­வ­டி­களை சர­ண­டை­யுங்கள்.

(“நோக்­கத்தை வாளால் சாதித்­துக்­கொள்­வதைவிட நகை முகத்தால் சாதித்­துக்­கொள்­வது சாலச்­சி­றந்­தது”) ராகு, சந்­திரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1–5

பொருந்தா எண்கள்: 9–8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right