12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (11.03.2020 )..!

2020-03-11 08:39:27

11.03.2020 ஸ்ரீவி­காரி வருடம் மாசி மாதம் 28 ஆம் நாள் புதன்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச துவி­தியை திதி முன்­னி­ரவு 7.21 வரை. அதன்மேல் திரி­தியை திதி. அஸ்தம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 10.44 வரை. பின்னர் சித்­திரை நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை துவி­தியை. மர­ண­யோகம். சம­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: சதயம், பூரட்­டாதி. சுப­நே­ரங்கள் 9.45–10.30 மாலை 4.30–5.30. ராகு­காலம் 12.00–1.30 எம­கண்டம் 7.30–9.00.குளி­கை­காலம் 10.30–12.00. வார­சூ­லம்–­வ­டக்கு (பரி­காரம்– பால்)

மேடம்        :மன­நிம்­மதி, உற்­சாகம்

இடபம்        :பகை, உற­வினர்தொல்லை

மிதுனம்       : மன­நி­றைவு, சந்­தோஷம்

கடகம்       : விவேகம், வெற்றி

சிம்மம்         : பொறுமை, அமைதி

கன்னி        : இன்பம், மகிழ்ச்சி

துலாம்        : பரிவு, பாசம்

விருச்­சிகம்  : பணம், பரிசு

தனுசு         : சங்­கடம், சோதனை

மகரம்        :உடல் உபாதை,மருத்­து­வ­செ­லவு

கும்பம்        : புகழ், செல்­வாக்கு

மீனம்        :வீண்­பி­ர­யாசை, ஏமாற்றம்

இன்று அத்தம் நட்­சத்­திரம். புதன்­கி­ழமை மர­ண­யோகம். அசு­பநாள் எனக் கொள்க. எறி­பத்தர் நாயனார், திரு­வள்­ளுவர் (அடி­யவர்) குரு­பூஜை தினங்கள். தொண்­ட­ரடிப் பொடி­யாழ்வார் அரு­ளிய திரு­மாலை பாசுரம் 19. “குட­திசை முடியை வைத்துக் குண­திசை பாதம் நீட்டி வட­திசை பின்பு காட்டி தென்­திசை இலங்கை நோக்கி” உல­கத்­த­வரே! கடல் நிற­மு­டைய எம்­பெ­ருமான் திரு­வ­ரங்­க­நாதன் மேற்கு திசையில் சிரசை வைத்து, கிழக்கு திசையில் தன்­பா­தங்­களை நீட்டி, வடக்கு திசைக்கு தன்­பின்­ன­ழகைக் காட்டி, தென்­தி­சையில் உள்ள இலங்­கையை நோக்கி ஆதி­சேஷன் மீது பள்­ளி­கொண்­டி­ருக்கும் அழ­கினைக் கண்டு என் தேகம் உரு­கு­கின்­றதே! என் செய்வேன்.

(“நல்­லது போனால் தெரியும் கெட்­டது வந்தால் தெரியும்”)

சந்­திரன், செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 7–5–6

பொருந்தா எண்கள்: 2–9–8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நிறங்கள்.

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோவில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right