12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (14.02.2020 )..!

Published on 2020-02-14 08:52:44

14.02.2020 ஸ்ரீ விகாரி வருடம் மாசி மாதம் 02 ஆம் நாள் வெள்ளிக்கிழமை.

கிருஷ்ணபட்ச சஷ்டி திதி பின்னிரவு 2.28 வரை. அதன் மேல் ஸப்தமி திதி. சித்திரை நட்சத்திரம் பிற்பகல் 1.09 வரை. பின்னர் சுவாதி நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை சஷ்டி. சித்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்தி ரங்கள்: பூரட்டாதி, உத்திரட்டாதி. சுப நேரங்கள் காலை 9.30 – 10.30, மாலை 4.30 – 5.30, ராகுகாலம் 10.30 – 12.00, எம கண்டம் 3.00 – 4.30, குளிகை காலம் 7.30 – 9.00, வாரசூலம் – மேற்கு (பரிகாரம்– வெல்லம்)   

மேடம் : காரியானுகூலம், நன்மை

இடபம் : பகை, கவலை

மிதுனம் : உடல் உபாதை, சிக்கல்

கடகம் : சுகம், ஆரோக்கியம்

சிம்மம் : புதிய முயற்சிகள்,  நன்மை

கன்னி : இலாபம், லக் ஷ்மீகரம்

துலாம் : முயற்சி, முன்னேற்றம்

விருச்சிகம் : பக்தி, தெய்வதரிசனம்

தனுசு : அன்பு, பாசம்

மகரம் : அச்சம், பகை

கும்பம் : தனம், பொருள்வரவு

மீனம் : நற்செய்தி, பகை நீங்குதல்

கிருஷ்ணபட்ச சஷ்டி விரதம். முருகப் பெருமானை வழிபடல் நன்று. சுபமுகூர்த்த நாள். இன்று சித்திரை, சுவாதி நட்சத்திரங்கள். பெருமானின் அவதாரமான நரசிம்ஹரையும் வாயுபுத் திரன் ஹனுமானையும் வழிபடல் நன்று.

(‘‘அறிவும் ஒழுக்கமும் வாழ்க்கை வண்டியின் இரு சக்கரங்கள்’’ – இங்கர் சால்)

புதன், சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

பொருந்தா எண்கள்: 9, 8, 6

அதிர்ஷ்ட வர்ணங்கள்: சாம்பல், லேசான பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)