12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ... இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (14.01.2020 )..!

Published on 2020-01-14 09:47:01

14.01.2020 ஸ்ரீவிகாரி வருடம் மார்கழி மாதம் 29ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.

கிருஷ்ணபட்ச சதுர்த்தி திதி மாலை 6.24 வரை. அதன்மேல் பஞ்சமி திதி. மகம் நட்சத்திரம் பகல் 11.22 வரை. பின்னர் பூரம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை சதுர்த்தி. சித்தயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் அவிட்டம், சதயம். சுபநேரங்கள் பகல் 10.30–11.30. மாலை 4.30–5.30 ராகு காலம் 3.00–4.30. எமகண்டம் 9.00–10.30. குளிகை காலம் 12.00–1.30. வாரசூலம் – வடக்கு (பரிகாரம்– பால்)  

மேடம் : உயர்வு, மேன்மை

இடபம் : சுகம், ஆரோக்கியம்

மிதுனம் : இலாபம், லக்ஷ்மீகரம்

கடகம் : அன்பு, இரக்கம்

சிம்மம் : இன்சொல், வரவேற்பு

கன்னி : வரவு, இலாபம்

துலாம் : யோகம், அதிர்ஷ்டம்

விருச்சிகம் : பகை, விரோதம்

தனுசு : வரவு, இலாபம்

மகரம் : சுபம், மங்கலம்

கும்பம் : வாழ்வு, வளம்

மீனம் : புகழ், சாதனை

சங்கடஹர சதுர்த்தி விரதம். பின்னிரவு முதல் உத்தராயண புண்ணிய காலம் ஆரம்பம். மகர சூரியன் இரவு 2.08. அங்காரக சதுர்த்தி. தனுர் மாத பூஜை முடிவு. திருப்பாவை நோன்பு முடிவு. போகிப் பண்டிகை. பழைய பொருட்களை விலக்கி வீட்டை சுத்தம் செய்து முன் னோர்களை வழிபடல் உகந்தது. தெஹி வளை ஸ்ரீவிஷ்ணு ஆலயத்தில் ஸ்ரீ ஆண் டாள் திருக்கல்யாண வைபவம். உற்ச வம். நாளை உழவர் திருநாள், தமிழர் பண் டிகை. வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

புதன், சூரியன் ஆதிக்கம் கொண்ட நாள் இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 1–5

பொருந்தா எண்கள்: 6–8–9

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், சாம்பல் நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)