12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (08.11.2019 )..!

Published on 2019-11-08 11:00:07

08.11.2019 ஸ்ரீவிகாரி வருடம் ஐப்பசி 

மாதம் 22 ஆம் நாள் வெள்ளிக்கிழமை

சுக்கிலபட்ச ஏகாதசி திதி பகல் 01.37 வரை. அதன்மேல் துவாதசி திதி. பூரட் டாதி நட்சத்திரம் பகல் 02.01 வரை. அதன்மேல் உத்திரட்டாதி நட்சத்திரம். சிரார்த்தத் திதி வளர்பிறை ஏகாதசி சித்த யோகம் கீழ்நோக்குநாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் மகம், பூரம் சுபநேரங்கள் காலை 09.15 - 10.15 மாலை 04.45 - 05.45 ராகுகாலம் 10.30 - 12.00 எமகண்டம் 03.00 - 04.30 குளிகைகாலம் 07.30 - 09.00 வாரசூலம் மேற்கு. (பரிகாரம் -வெல்லம்)

மேடம் : துணிவு, காரியசித்தி  

இடபம் : பக்தி, அனுக்கிரகம்

மிதுனம்         : சுகம், ஆரோக்கியம் 

கடகம் : பிரயாணம், இடப்பெயர்ச்சி 

சிம்மம் : தனவரவு, திரவியலாபம்

கன்னி : இன்பம், மகிழ்ச்சி

துலாம் : வஸ்திரலாபம், மகிழ்ச்சி

விருச்சிகம் : புகழ், பெருமை 

தனுசு : பயம், பொருட்சேதம்

மகரம் :  நிலைபிரிவு, மனக்கவலை

கும்பம் : சுகம், ஆரோக்கியம்

மீனம் :  திறமை, முன்னேற்றம்

இன்று ஐப்பசி மாதம் சுக்கில பட்ச ஏகாதசி விரதம். இதற்கு பிரபோதினி ஏகாதசி என்றும் பள்ளியெழுந்த ஏகாதசி என்றும். உத்தான ஏகாதசி என்றும் சொல் வார்கள். சயன ஏகாதசியன்று பள்ளி கொண்ட மகாவிஷ்ணு இன்று கண் விழிக்கின்றார். இன்றோடு சாதுர்மாஸ்ய விரதம் முடிகிறது. இன்று உபவாஸமிருந்து ஸ்ரீமன் நாராயணனை வழிபடல் நன்று. நாளை துவாதசி பாரணை சுண்டைக்காய், அகத்திக்கீரை நெல்லிக்காய் இவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். விலக்கவேண்டிய புடலங்காய், கத்தரிக்காய், தேன், வெங்காயம், பகலில் தூக்கம், எண் ணெய் ஸ்நானம், ஸ்திரிபோகம் ஏகாதசி புண்யத்தை அகற்றி விடும். 

("முதுமை என்பது இரண்டாவது குழந் தைப் பருவம்" அரிஸ்டோ பளிஸ்)

சனி ராகு கிரகங்களின் ஆதிக்க நாளின்று. 

அதிஷ்ட எண்கள் - 1, 5, 6

பொருந்தா எண்கள் - 8, 4

அதிஷ்ட வர்ணங்கள் - மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி 

(தெகிவளை ஸ்ரீவிஷ்ணு