12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (06.11.2019 )..!

Published on 2019-11-06 10:27:23

06.11.2019 ஸ்ரீவி­காரி வருடம் ஐப்­பசி மாதம் 20 ஆம் நாள் புதன்­கி­ழமை 

சுக்­கி­ல­பட்ச நவமி திதி காலை 09.33 வரை. அதன்மேல் தசமி திதி. அவிட்டம் நட்­சத்­திரம் காலை 09.00 மணி வரை. பின்னர் சதயம் சிரார்த்த திதி வளர்­பிறை தசமி. மர­ண­யோகம் காலை 09.00 வரை. பின்னர் சித்­த­யோகம். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் ஆயில்யம். மேல்­நோக்­குநாள் சுப­நே­ரங்கள் பகல் 10.45 -11.45 மாலை 03.00 - 04.00 ராகு­காலம் 12.00 - 01.30 எம­கண்டம் 07.30 - 09.00 குளி­கை­காலம் 10.30 - 12.00 வார­சூலம் - வடக்கு (பரி­காரம் - பால்) கரிநாள் சுபம் விலக்­குக.

மேடம் :இன்பம், மகிழ்ச்சி 

இடபம் :பிர­யாணம், செலவு 

மிதுனம் :அன்பு, பாசம் 

கடகம் :வெற்றி, அதிஷ்டம் 

சிம்மம் :தெளிவு, அமைதி

கன்னி :அசதி, ஓய்வு

துலாம்  :அமைதி, சாந்தம் 

விருச்­சிகம் :முயற்சி, முன்­னேற்றம்

தனுசு :திறமை, முன்­னேற்றம்

மகரம் :புகழ், பாராட்டு

கும்பம் :பரிவு, பாசம் 

மீனம் :நன்மை, அதிஷ்டம்

பேயாழ்வார் திரு­நட்­சத்­திரம். அவ­தரித்த ஊர் திரு­ம­யிலை (மயி­லாப்பூர்) மாதம் ஐப்­பசி நட்­சத்­திரம் சதயம். அம்சம் நந்­த­காம்சம். பாடி­யது மூன்றாம் திரு­வந்­தாதி. முதல் பாசுரம் ‘‘திருக்­கண்டேன் பொன் மேனி கண்டேன்’’ இறுதி பாசுரம் முடிவில் ‘‘வான் அமரும் மின் இமைக்கும் வண் தாமரை நெடுங்கண் தேன் அமரும் பூமேல் திரு.’’ திரு­ம­க­ளா­கிய தாயார் தான் திரு­மாலின் திரு­மார்பில் இவ­ருக்கு முதலில் காட்சி கொடுத்தாள். பூமங்கை கேள்­வனை ரசித்து, ருசித்து பாடிய பாசு­ரங்கள். பொய்­கை­யாழ்வார், பூதத்­தாழ்­வா­ருடன் நெருங்­கி­டவே இடை­க­ழியில் நின்ற செல்வன் வாழியே! நேமி சங்கன் வடி­வ­ழகை நெஞ்சில் வைப்போன் வாழியே! பேயாழ்வார் தாளினை இப்­பெ­ரு­நி­லத்தில் வாழியே! ஆழ்வார் திரு­வ­டி­களே சரணம். 

(‘‘அதிஷ்ட தேவதை சபல புத்­தி­யு­டை­யவள். எந்த நேரத்தில் யாரிடம் போவாள் என்று சொல்ல முடி­யாது.  ஜார்ஜ் எலியட்)

சுக்­கிரன் சந்­திரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று. 

அதிஷ்ட எண்கள் - 6, 7

பொருந்தா எண்கள் - 3, 9, 8

அதிஷ்ட வர்­ணம் - பச்சை நிறம். 

"இராமரத்தினம் ஜோதி (தெகிவளை 

ஸ்ரீ வெங்கடேசஸ்வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்தானம்)