12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (02.11.2019 )..!

Published on 2019-11-02 09:25:29

02.11.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் சனிக்கிழமை.

சுக்கிலபட்ச சஷ்டி திதி பின்னிரவு 5.29 வரை. அதன்மேல் ஸ்பதமி திதி. பூராடம் நட்சத்திரம் பின்னிரவு 3.25 வரை. பின்னர் உத்திராடம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை சஷ்டி. சித்தயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் மிருகசீரிஷம். சுப நேரங்கள்: பகல் 10.45 – 11.45 மாலை 4.45 – 5.45 ராகுகாலம் 9.00 – 10.30 எமகண்டம் 1.30 – 3.00 குளிகைகாலம் 6.00 – 7.30. வாரசூலம் – கிழக்கு (பரிகாரம் – தயிர்)

மேடம் : புகழ், செல்வாக்கு

இடபம் : கீர்த்தி, புகழ்

மிதுனம் : சுபம், மங்களம்

கடகம் : நட்பு, உதவி

சிம்மம் : அன்பு, பாசம்

கன்னி : காரியசித்தி, அனுகூலம்

துலாம் : வெற்றி, அதிர்ஷ்டம்

விருச்சிகம் : வரவு, இலாபம்

தனுசு : சுகம், ஆரோக்கியம்

மகரம் : கோபம், அமைதி

கும்பம் : புகழ், பாராட்டு

மீனம் : திறமை, முன்னேற்றம்

இன்று சுக்கிலபட்ச சஷ்டி. கந்த சஷ்டி விரதம். சூர சம்ஹாரம் பெருவிழா. சூரன் ஆணவ மலம் நிறைந்த உயிர். ஆணவ மலம் ஒருங்கினாற்றான் இறைவனை உயிர்காணும் அவ்வாணவ மலத்தை போக்கும் ஆற்றல் உடையவன் இறைவன் ஒருவனே. முருகன் சூரனை சம்கரிக்கவில்லை. வதம் செய்யவில்லை. மறக் கருணையால் அவனை சேவலும் மயிலுமாக ஏற்றுக்கொண்டார், ஆட் கொண்டார் என்பதே சூரன் போரின் தத்துவமாகும். சேவலும் மயிலும் போற்றி. திருக்கைவேல் போற்றி, போற்றி.

சந்திரன், கேது கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5 – 1 – 6

பொருந்தா எண்கள்: 9 – 8 – 7

அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிர் பச்சை, மஞ்சள்