12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (31.10.2019 )..!

Published on 2019-10-31 10:10:10

31.10.2019 ஸ்ரீவிகாரி வருடம் ஐப்பசி மாதம் 14 ஆம் நாள் வியாழக்கிழமை

சுக்­கி­ல­பட்ச சதுர்த்தி திதி பின்­னி­ரவு 05.09 வரை. அதன்மேல் பஞ்­சமி திதி. கேட்டை நட்­சத்­திரம் பின்­னி­ரவு 02.02 வரை. பின்னர் மூலம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை. சதுர்த்தி சித்­த­யோகம் சம­நோக்­குநாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் கார்த்­திகை. சுப­நேரம் 10.45 – 11.45 பிற்­பகல் 12.15 – 01.15 ராகு­காலம் 01.30 – 03.00 எம­கண்டம் 06.00 – 07.30 குளி­கை­காலம் 09.00 –10.30 வார­சூலம் தெற்கு பரி­காரம் தைலம் சதுர்த்தி விரதம். துர்வா கண­பதி விரதம். நாக­ச­துர்த்தி விநாயகர் வழிபாடு நன்று. 

மேடம்          : தனலாபம், சௌக்கியம்  

இடபம்         : வஸ்திர லாபம், லக்ஷமீகரம்

மிதுனம்       : காரியசித்தி, அனுகூலம் 

கடகம்          : திறமை, முன்னேற்றம் 

சிம்மம்         : சுகம், ஆரோக்கியம் 

கன்னி          : கீர்த்தி, செல்வாக்கு

துலாம்          :  லாபம், லக் ஷ்மீகரம் 

விருச்சிகம்    : பொருள், வரவு 

தனுசு           :  சலனம், பொருட்சேதம்

மகரம்           : சுகபோசனம்

கும்பம்          : காரியசித்தி, தனலாபம்

மீனம்            : அமைதி, சாந்தம்

'ஸ்கந்த சஷ்டி விரதம்' 04ஆம் நாள். இன்று உப­வா­ஸ­மி­ருந்து முருகப் பெரு­மானை வழி­படல் நன்று உப­வா­ஸ­மென்­பது உப­ச­மீ­ப­வாசம். இறை­வனை அண்­மித்து நாம் வாசம் செய்­வது என்று பொரு­ளாகும் ஆறு நாள் நோன்பு காமக்­கு­ரோ­த­லோப மோச மத மாற்­ச­ரி­ய­மா­கிய அறு பகை­க­ளையும் முரு­கனால் அகற்­றப்­படும் என்று பொரு­ளாகும். "ஆறிரு தடந்தோழ் வாழ்க!  ஆறு­முகம் வாழ்க வெற்பைக் கூறு செய் தனிவேல் வாழ்க! குக்­குடம் வாழ்க! செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க! யானை தன்­ன­ணங்கும் வாழ்க மாறிலா வள்ளி வாழ்க! வாழ்க சீரடி யாரெல்லாம்.

("ஏழைகள் உணவைத் தேடுகின்றனர். பணக்காரர்கள் பசியைத் தேடுகின்றனர்" கோல்டோனி)

ராகு சனி கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிஷ்ட எண்கள் : 1, 5

பொருந்தா எண் : 8 

அதிர்ஷ்ட வர்ணங்கள் : மஞ்சள், வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெகிவளை ஸ்ரீவெங்கடேஸ்வர மகாவிஷ்ணு மூர்த்தி தேவஸ்தானம்)