12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (21.10.2019)..!

Published on 2019-10-21 10:42:07

21.10.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஐப்­பசி மாதம் 4 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச அஷ்­டமி திதி பின்­னி­ரவு 1.37 வரை. அதன் மேல் நவமி திதி. புனர்­பூசம் நட்­சத்­திரம் பிற்­பகல் 2.50 வரை. பின்னர் பூசம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை அஸ்­டமி. அமிர்­த­சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: பூராடம், உத்­தி­ராடம். சுப­நே­ரங்கள்: காலை 9.15– 10.15, மாலை 4.45– 5.45, ராகு காலம் 7.30– 9.00 குளி­கை­காலம் 1.30– 3.00, எம­கண்டம் 10.30– 12.00, வார­சூலம் –கிழக்கு (பரி­காரம்– தயிர்) அவ­மாகம். காலாஷ்­டமி ராதா ஜெயந்தி, ஈசுவா ராஷ்­டமி. 

மேடம் : நலம், ஆரோக்­கியம்

இடபம் : நட்பு, உதவி

மிதுனம் : திறமை, ஆர்வம்

கடகம் : பகை, பயம்

சிம்மம் : விருத்தி, மேன்மை

கன்னி : செலவு பற்­றாக்­குறை

துலாம் : பாராட்டு, செல்­வாக்கு

விருச்­சிகம் : வெற்றி, அதிர்ஷ்டம்

தனுசு : சலனம், சஞ்­சலம்

மகரம் : புகழ், சாதனை

கும்பம் : அமைதி, தெளிவு

மீனம் :பிர­யாணம், அலைச்சல்

குருப்­பெ­யர்ச்சி (28.10.2019) தனு­ராசி பிர­வேசம். துலா ராசிக்­கு­ரிய  பலன்கள். சித்­திரை 3, 4 பாதங்கள். சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் ராசி­யா­தி­பதி சுக்­கிரன், நட்­சத்­திர அதி­ப­திகள் செவ்வாய், ராகு, குரு. யோகா­தி­ப­திகள் சனி, புதன், சுக்­கிரன். பாத­கா­தி­பதி சூரியன். 5 ஆம் பார்­வை­யாக உங்கள் ராசிக்கு 7  மிடம் களத்­திர ஸ்தானம், 7 ஆம் பார்­வை­யாக 9 மிடம் லாபஸ்­தா­னத்­தையும் செழிப்­ப­டைய வைப்பார். இதனால் கணவன் –மனை­வி­யி­டையே அன்­யோன்யம் ஏற்­படும். பிரிந்­த­வர்கள் ஒன்று சேர்­வார்கள். ரோகங்கள் அகலும். சுகம் விருத்­தி­யாகும். பிதிர் ஸ்தானம், தர்­மஸ்­தானம் பாக்­கி­யஸ்­தானம் சிறப்­ப­டை­வதால் தொழில்­வி­ருத்தி, பணப்­பு­ழக்கம், வியா­பா­ரி­க­ளுக்கு பணப்­பு­ழக்கம், தகு­தி­யான வேலை, இலாபம் பெருகும், சொத்து சேரும். அமரும் இடத்தில் குரு பகவான் தாழ்ந்­தாலும் பார்வைப் பலத்தால் உங்­களை உயர்ந்த நிலைக்கு கொண்­டு­செல்வார். 75% நன்­மை­யுண்டு. ஆஞ்­ச­நே­ய­ருக்கு வெற்­றி­லை­மாலை. சனி பக­வா­னுக்கு நல்­லெண்ணெய் தீபம். பசு மாட்­டிற்கு அகத்திக் கீரை வழங்­கி­வா­ருங்கள். நன்­மை­யுண்டாம். (தொடரும்)

குரு, கேது கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1– 5

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ்சிகப்பு

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)