12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (09.10.2019)..!

Published on 2019-10-09 09:12:27

09.10.2019 ஸ்ரீ விகாரி வருடம் புரட்டாதி மாதம் 22 ஆம் நாள் புதன்கிழமை.

சுக்கிலபட்ச ஏகாதசி திதி முன்னிரவு 7.26 வரை. அதன் மேல் துவாதசி திதி. அவிட்டம் நட்சத்திரம் பின்னிரவு 1.50 வரை. பின்னர் சதயம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை ஏகாதசி. மரண யோகம். மேல்நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: பூரம், ஆயில்யம். சுபநேரங்கள்: பகல் 10.45 – 11.45 மாலை 4.45–5.45. ராகுகாலம் 12.00–1.30 எமகண்டனம் 7.30 – 9.00. குளிகைகாலம் 10.30–12.00. வாரசூலம்–வடக்கு (பரிகாரம் – பால்) ஸர்வ வளர்பிறை ஏகா தசி. ஸ்ரீமன் நாராயணனை வழிபடல் நன்று.

மேடம் : ஜெயம், புகழ்

இடபம் : புகழ், பாராட்டு

மிதுனம் : கவனம், எச்சரிக்கை

கடகம் : அமைதி, தெளிவு

சிம்மம் : அன்பு, பாசம்

கன்னி : தடை, இடையூறு

துலாம் : இலாபம், ஆதாயம்

விருச்சிகம் : அமைதி, சாந்தம்

தனுசு : செலவு, விரயம்

மகரம் : புகழ், பெருமை

கும்பம் : பரிவு, பாசம்

மீனம் : உற்சாகம், மகிழ்ச்சி

ஸ்ரீ வெங்கடேஸ்வர பிரம்மோற்சவ வைபவம். கெருட சேவை. திருமாலை– தொண்டரடிப் பொடியாழ்வார் அருளியது. பெண்ணுலாம் சடையினாலும் பிரம்மனும் உன்னைக் காண்பான். எண்ணிலார் யூழி யூழி தவம் செய்தார் வெள்கி நிற்ப கங்கை குடிகொண்ட ஜடா முடியை உடைய சிவபெருமானும், பிரம்மனும் உன்னைக் காண நெடுங்காலமாகத் தவம் செய்தும் காண முடியாமல் வெட்கித் தலைகுனிந்து நிற்கின்றனர். விண்ணுலார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை யீந்த கண்ணறா! உன்னையென்னோ! களைக்கனாக் கருதுமாறே. இப்படி இருக்க, முதலை வாய்ப்பட்ட யானையை காத்தருள கெருட வாகனத்தில் விரைந்து சுதர்ஸன சக்கரத்தை ஏவி முதலையை கொன்றதை எண்ணி நித்ய சூரிகள் வியக்கின்றனர். ஒர வஞ்சகனை உன்னை சரணடைய எண்ணுவது என்ன விந்தை? (தொடரும்)

செவ்வாய், ராகு கிரகங்களின் ஆதிக்க நாளான இன்று,

அதிர்ஷ்ட எண்கள்: 5 – 6

பொருந்தா எண்கள்: 2 – 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், மஞ்சள், இளஞ்சிவப்பு

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)