12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (08.10.2019)..!

Published on 2019-10-08 10:14:22

08.10.2019 ஸ்ரீ விகாரி வருடம் புரட்­டாதி மாதம் 21 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச தசமி திதி மாலை 5.45 வரை. அதன் மேல் ஏகா­தசி திதி. திரு­வோ ணம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 11.32 வரை. பின்னர் அவிட்டம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை தசமி. சித்­த­யோகம். மேல்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: புனர்­பூசம், பூசம். சுப­நே­ரங்கள்: பகல் 10.45 – 11.45 மாலை 4.45 – 5.45. ராகு­காலம் 3.00 – 4.30 எம­கண்டம் 9.00 – 10.30 குளி­கை­காலம் 12.00 – 1.30. வார­சூலம் – வடக்கு (பரி­காரம் – பால்) விஜ­ய­த­சமி வித்­யா­ரம்பம், வேதா­ரம்பம், திரு­வோண உப­வாஸம். வேதாந்த தேசிகள் திரு­நட்­சத்­திரம். திரு­வேங்­க­ட­மு­டையான் வழி­பாடு. கேதார கௌரி விர­தா­ரம்பம். ஸமீ விருட்சப் பூஜை மானம்பூ உற்­சவம். 

மேஷம் : இலாபம், லஷ்­மீ­கரம்

இடபம் : நிறைவு, பூர்த்தி

மிதுனம் : நிறைவு, விருத்தி

கடகம் : வரவு, ஆதாயம்

சிம்மம் : அன்பு, இரக்கம்

கன்னி : நன்மை, அதிர்ஷ்டம்

துலாம் : நலம், ஆரோக்­கியம்

விருச்­சிகம் : மறதி, பொருள் நஷ்டம்

தனுசு : உதவி, நட்பு

மகரம் : வெற்றி, யோகம்

கும்பம் : பொறுமை, அமைதி

மீனம் : காரி­ய­சித்தி, அனு­கூலம்

புரட்­டாதி மாதம் ஸ்ரீ வெங்­க­டேச பிரம்­மோற்­ச­வத்தில் சேஷ வாக­னத்தில் சேவை ‘சென்றால் குடையாம் இருந்தால் சிங்­கா­ச­னமாம், நின்றால் மர­வ­டியாம் நீள் கடலுள் என்றும் புனையாம் மணி­வி­ளக்காம் பூம்­பட்டாம். புல்கும் அனையாம் திருமாற் கரவு முதல் திரு­வந்­தாதி, பொய்­கை­யாழ்வார். மகா­லஷ்­மியை மார்பில் தரித்­துள்ள பெரு­மா­னுக்கு ஆதி­சேடன் கிருஷ்­ணா­வ­தா­ரத்தில் உல­வு­கையில் குடை­யாக இருக்­கின்றான். ஸ்ரீவை­குண்­டத்தில் சிங்­கா­ச­ன­மாக உள்ளான். இரா­ம­வ­தா­ரத்தில் திரு­வ­டியில் பாது­கை­யாக மாறி­யுள்ளான். திருப்­பாற்­க­டலில் பள்ளி கொள்ளும் போது தெப்­ப­மாக தாங்­கி­யுள்ளான். திருமால் அடி­யார்க்கு மாணிக்க விளக்காய் தெரி­கின்றான். பரந்­தா­மனை தழுவும் பரி­வட்­ட­மாக காட்­சி­ய­ளிக்­கின் றான். இரா­ம­வ­தா­ரத்­திலும் கிருஷ்­ண­வ­தா­ரத்­திலும் சார்ந்­தி­ருக்கும் கைப்­பி­டி­யாக இலக்­கு­மணன், பல­ரா­ம­னாக பிறப்­பெ­டுத்­துள்ளான். விஷ்ணு சேவைக்­கா­கவே அவ­த­ரித்­தவன் ஆதி­சேஷன். (தொடரும்)

சனி, குரு கிரகங்களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 1 – 5

பொருந்தா எண்கள்: 8 – 6

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ்சிவப்பு, ஊதா நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)