12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (07.10.2019)..!

Published on 2019-10-07 10:59:46

07.10.2019 ஸ்ரீவிகாரி வருடம் புரட்டாதி மாதம் 20 ஆம் நாள் திங்கட்கிழமை

சுக்­கி­ல­பட்ச நவமி திதி மாலை 04.27 வரை. அதன்மேல் தசமி திதி. உத்­தி­ராடம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 09.35 வரை. பின்னர் திரு­வோணம் நட்­சத்­தி ரம். சிரார்த்த திதி வளர்­பிறை நவமி. மர­ண­யோகம். மேல்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் திரு­வா­திரை, புனர்­பூசம் சுப­நே­ரங்கள் காலை 09.15– 10.15 மாலை 04.45- – 05.45 ராகு­காலம் 07.30 – 09.00 எம­கண்டம் 10.30 – 12.00 குளி­கை­காலம் 01.30 – 03.00 வார­சூலம் கிழக்கு (பரி­காரம் தயிர்) நவ­ராத்­திரி விரதம், சரஸ்­வதி பூஜை, ஆயுத பூஜை, வீடு­களில் சரஸ்­வதி பூஜை, தொழில் ஸ்தானங்­களில் பூஜை. ஏனாதி நாயனார் குருபூஜை. ஸ்வாயம்புவ மன்வாதி.

மேடம்         : மகிழ்ச்சி, உற்சாகம்

இடபம் :போட்டி, வெற்றி

மிதுனம் : பொறுமை, அமைதி 

கடகம் : ஓய்வு, அசதி

சிம்மம் : லாபம், ஆதாயம்

கன்னி : நட்பு, உதவி 

துலாம் : விரயம், செலவு 

விருச்சிகம் : பிரயாணம், செலவு 

தனுசு : கவலை, கஷ்டம்

மகரம் : புகழ், பெருமை

கும்பம் : லாபம், லக்ஷ்மிகரம்

மீனம் : காரியசித்தி, அனுகூலம்

திரு­மலை திருப்­பதி ஸ்ரீவெங்­க­டேச பிரம்­மோற்­சவம். இம்­ம­லைக்கு "கன­காத்ரி" என்ற பெய­ருண்டு. ஒரு பொற்­கு­ட­மாக தன்­ன­டி­யார்­க­ளுக்கு அருள்­கின்­றது. "சிந்­தா­மணி" என்று பெய­ருண்டு. அடி­யார்கள் கேட்கும் அனைத்­தையும் கொடுக்­கின்றான் திரு­வேங்­க­டவன். தன் பக்­தர்­க­ளுக்கு கற்­பக விருட்­ச­மாக சேவை செய்­கின்றான். எதைக் கேட்­டாலும் கொடுக்க வல்­லது காமதேனு, கற்­பக விருட்சம். ஆனால் தம்மை இவ்­வி­ரண்டும் ஒரு­போதும் கொடுக்­காது. ஆனால் ஸ்ரீவெங்­க­டேசன் எதைக் கேட்­டாலும் உடனே கொடுத்து விடு­கிறான். தன்­னையே கொடுத்து விடு­கிறான். "எனக்கே  தன்னை தந்த கற்பக விருட்சம்" என்­கின்­றது ஆழ்வார் பாசுரம். வேங்­க­டாத்ரி சமஸ்­தானம் பிர­மாண்டே நாஸ்தி கிஞ் சன. வேங்கடேசமோ தேவோ நபூதோ நபவிஸ்தி" (தொடரும்)

கேது சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று. 

அதிஷ்ட எண்கள் –  1, 5

பொருந்தா எண்கள் – 7, 8, 9

அதிஷ்ட வர்ணங்கள் – வெளிர் நீலம், வெளிர் மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி (தெகிவளை 

ஸ்ரீவெங்கடேசஸ்வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்தானம்)