12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (05.10.2019)..!

Published on 2019-10-05 10:20:12

05.10.2019 ஸ்ரீவிகாரி வருடம் புரட்டாதி மாதம் 18 ஆம் நாள் சனிக்கிழமை

சுக்கிலபட்ச ஸப்தமி திதி மாலை 03.13 வரை. அதன்மேல் அஷ்டமி திதி. மூலம் நட்சத்திரம் மாலை 06.58 வரை. பின்னர் பூராடம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர் பிறை ஸப்தமி. சித்தயோகம் கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் சுபநேரங்கள் பகல் 10.45 –11.45 மாலை 03.00–04.00 ராகுகாலம் 09.00–10.30 எமகண்டம் 01.30–03.00 குளிகை காலம் 06.00–07.30 வாரசூலம் கிழக்கு (பரிகாரம் தயிர்) புரட் டாதி முன்றாம் சனி வாரம் சரஸ்வதி பூஜாரம்பம்.   

மேடம் : சினம், பகை

இடபம் : உயர்வு, மேன்மை

மிதுனம் : அமைதி, சாந்தம்

கடகம் : முயற்சி, முன்னேற்றம்

சிம்மம் : செலவு, பற்றாக்குறை

கன்னி : சுகம், ஆரோக்கியம்

துலாம் : போட்டி, ஜெயம்

விருச்­சிகம் : வெற்றி, யோகம்

தனுசு : பகை, குரோதம்

மகரம் : பகை, எதிர்ப்பு

கும்பம் : கவனம், எச்சரிக்கை

மீனம் : உயர்வு, மேன்மை

புரட்­டாதி சனி வாரம் ஸ்ரீவெங்­க­டேச பிரம்­மோற்­சவம். 'வரா­ஹாத்ரி' சதுர்­யுகங் கள் நான்கு நான்­காக சென்று தற்­போது நாம் வாழ்ந்து கொண்­டி­ருப்­பது இருபத் தெட்­டா­வது சதுர்­யுகம். இதற்கு சுவேத 'வரா­ஹ­கல்பம்' என்று பெயர். இரண்யாட் சன் இரண்­யாட்சன் என்னும் ஓர் அசுரன் பூமா­தே­வியை கவர்ந்து கட­லுக்­க­டியில் ஒளித்து வைக்க திருமால் வெள்ளைப் பன்­றி­யாக வராஹ அவ­தா­ர­மெ­டுத்து, தன் கோரைப் பற்­களால் நில மடந்­தை­தனை இடர்ந்து புல்கி கோட்­டிடை வைத்து அரு­ளினான். பூமா­தே­வியை தன் மடியில் அமர்த்திக் கொண்டார். வந்த காரியம் முடிந்து விட்­டது  நான் சென்று வரட்­டுமா?  என்று பகவான் வினவ அது எப்­படி முடியும் சுவாமி? நீங்கள் இங்கு என்­னோடு இருக்க வேண்டும் என்று பூமி­பி­ராட்டி வேண்ட, உடனே வரா­ஹப்­பெ­ருமான் கெரு­டனை வர­வ­ழைத்து ஸ்ரீவை­குண்­டத்தில் எனக்­குள்ள கிரீட விமா­னத்தை பூமிக்கு எழுந்­த­ருளச் செய் என்று கூற கருடன் கொண்டு வந்­ததால் இம்­மலை 'கெரு­டாத்­திரி' என் றும் ஆனந்த நிலைய விமா­ன­மென்றும் வை குண்­டத்தில் பக­வானின் விளை­யாட்­டுக்கு கார­ணமாய் இருந்­ததால் கிரீ­டாத்ரி  என்றும் வராஹப் பெருமான்  வசிப்­ப­தற்கு இடமாய் உள்­ளதால் திரு­மலை திருப்­பதி வரா­ஹாத்­திரி என்றும் பெயர் பெற்­றது. நாளை திரு­மலை தீர்த்­தாத்ரி தொடரும். 

புதன் (5) செவ்வாய் (9) கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்  – 5, 1, 9

பொருந்தா எண்கள்   – 2, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்–சாம்பல், நீலம், சிவப்பு