12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (03.10.2019)..!

Published on 2019-10-03 09:59:09

03.10.2019 ஸ்ரீவிகாரி வருடம் புரட்டாதி மாதம் 16 ஆம் நாள் வியாழக்கிழமை 

சுக்­கி­ல­பட்ச பஞ்­சமி திதி மாலை 04.01 வரை. அதன்மேல் சஷ்டி திதி. அனுஷம் நட்­சத்­திரம் மாலை 06.20 வரை. பின்னர் கேட்டை நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை பஞ்­சமி சித்­த­யோகம் கரிநாள் (சுபம் விலக்­குக) சம­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் பரணி, கார்த்­திகை சுப­நே­ரங்கள் பகல் 10.45 – 11.45 ராகு­காலம் 01.30 – 03.00 எம­கண்டம் 06.00 – 07.30 குளி­கை­காலம் 09.00 –10.30 வார­சூலம் தெற்கு (பரி­காரம் – தைலம்) நவ­ராத்ரி விரதம் மகா­லக் ஷ்மி பூஜை. மங்­கள நாயகி.  பெண்­களின் மஞ்சள் குங்­குமம் மாங்­கல்யம் இவற்­றிக்கு அதி­ப­தி­யா­னவள். சகல செல்வங்களுக்கு அதிபதியானவள். 

மேடம் : இன்பம், மகிழ்ச்சி

இடபம் : அமைதி, சாந்தம் 

மிதுனம்         : இடையூறு, தடை 

கடகம் : பிரயாணம், அலைச்சல்

சிம்மம் : வரவு, ஆதாயம் 

கன்னி : உயர்வு, மேன்மை

துலாம் : அமைதி, தெளிவு

விருச்சிகம் : ஆக்கம், நிறைவு

தனுசு : கோபம், அவமானம்

மகரம் : முயற்சி, முன்னேற்றம்

கும்பம் : புகழ், பெருமை

மீனம் : திறமை, முன்னேற்றம்

புரட்டாதி மாதம். ஸ்ரீவெங்கடேஸ்வர பிரம்மோற்சவம்  வாயுக்கும் ஆதிசேடனுக் கும் போட்டி ஏற்பட வாயு பகவான் காற்றை வீசி மேரு பர்வதத்தை பறக்க விடுகிறேன் என்று காற்றை வீச ஆதிசேடன் மேரு மலையைப் பற்றிப் பிடிக்க இதனால் பக் தர்களுக்கு இடையூறு ஏற்பட விஷ்ணுவும் நாரதரைப் பார்த்து சமிக்ஞை காட்ட நாரதரும் தன் வீணாகானத்தை மீட்க ஆதிஷேடன்  இசையை கேட்டு ஒரு தலையை மட்டும் தூக்க. அப்போது வாயு காற்றை பலமாக வீச மேருவின் ஒருபாகம் மட்டும் பூமியை நோக்கி கிழே விழ உடனே ஆதி ஷேடன் மலை விழ முன் கீழே வந்து மலை யைத் தாங்கிக் கொண்டார். அந்தத் தலைப் பகுதியை தாங்கிக் கொண்டதால் துவா பர யுகத்தில் திருமலை பெற்ற பெயர் சேஷாத் திரி ஆகும். பூகோள ரீதியாக திருவேங்கடம் தொடரும்.

குரு கேது கிரகங்களின் ஆதிக்க நாளின்று. 

அதிர்ஷ்ட எண்கள் 1, 5

பொருந்தா எண்கள்  6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள் மஞ்சள்,  இளஞ்சிவப்பு

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)