12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (09.09.2019)..!

Published on 2019-09-09 11:56:54

09.09.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஆவணி மாதம் 23 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச ஏகா­தசி திதி. பின்­னி­ரவு 3.27 வரை. அதன் மேல் துவா­தசி திதி. பூராடம் நட்­சத்­திரம் பகல் 12.43 வரை. அதன் மேல் உத்­தி­ராடம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை ஏகா­தசி. சித்­த­யோகம் பகல் 12.43 வரை. பின்னர் மர­ண­யோகம். கீழ் நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: மிரு­க­சீரிஷம், திரு­வா­திரை. சுப­நே­ரங்கள்: காலை 9.15 – 10.15, மாலை 4.45 – 5.45, ராகு­காலம் 7.30 – 9.00, எம­கண்டம் 10.30 – 12.00, குளி­கை­காலம் 1.30 – 3.00. வார­சூலம் – கிழக்கு (பரி­காரம் – தயிர்) இன்று மது­ரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் புட்டுத் திரு­விழா. வைகை ஆற்றில் சிவ­பெருமான் பிட்­டுக்கு மண்­சு­மந்த லீலை.

மேடம் : திடம், நம்­பிக்கை

இடபம் : உதவி, உப­காரம்

மிதுனம் : கவனம், அவ­தானம்

கடகம் : நட்பு, உதவி

சிம்மம் : தனம், சம்­பத்து

கன்னி : வெற்றி, அதிர்ஷ்டம்

துலாம் : உயர்வு, மேன்மை

விருச்­சிகம் : புகழ், செல்­வாக்கு

தனுசு : அன்பு, ஆத­ரவு

மகரம்    : தன­லாபம், செல்­வம்       கும்பம் : ஊக்கம், உயர்வு

மீனம் : சுபம், மங்­களம்

இன்று சுக்­கி­ல­பட்ச ஸர்வ ஏகா­தசி விரதம். இதற்கு விஷ்ணு பரி­வர்­தன ஏகா­தசி (பத்ம நாபா ஏகா­தசி) என்ற பெயர்கள் உண்டு. ஸ்ரீ மகா­விஷ்ணு திருப்­பாற்­க­டலில் பள்ளி கொண்டு இரண்டு மாதங்கள் ஆகி­விட்­டன. இடம் இருந்து வல­மாக அவர் திரும்பிப் படுத்த நாளிது. திருமால் தூங்­கி­னாரா? அல்­லது தூங்­கு­வதைப் போல் நடிக்­கி­றாரா? அவர் தூங்­கினால் உலகம் இயங்­குமா? இதனை அரு­ணா­ச­ல­கவி “ஏன் பள்ளி கொண்டீர் ஐயா-?” என்றும், திரு­மங்­கை­யாழ்வார் திருச்­சந்த விருத்­தத்தில் “நடந்த கால்கள் நொந்­த­துவோ” என்ற பாசு­ரத்தில் அன்று இரா­மா­வ­தா­ரத்தில் அயோத்­தி­யி­லி­ருந்து ஸ்ரீலங்கா வரை நடந்து வந்தாய். அதனால் உன் கால்கள் வலித்து உறங்­கு­கின்­றாயா? என்று கேச­வனைப் பார்த்து கேட்­கின்றார். ஸ்ரீ விஷ்­ணுவை வழி­ப­டு வோம். வெற்­றிகள் பெறுவோம்.

செவ்வாய், குரு ஆதிக்கம் கொண்ட இன்று,

அதிர்ஷ்ட எண்கள்: 5 – 3 – 9

பொருந்தா எண்கள்: 2 – 6 – 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், சிவப்பு

இராமரத்தினம் ஜோதி 
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)