17.04.2016 துர்முகி வருடம் சித்திரை மாதம் 4 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை

Published on 2016-04-17 13:36:27

சுக்கில பட்ச ஏகாதசி திதி பின்னிரவு 4.13 வரை. அதன் மேல் துவாதசி திதி மகம் நட்சத்திரம் முன்னிரவு 10.33 வரை. பின்னர் பூரம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை ஏகாதசி மரண யோகம் கீழ்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் உத்திராடம் திருவோணம். சுபநேரங்கள் பகல் 11.00– 12.00, மாலை 3.30– 4.30, ராகு காலம் 4.30– 6.00, எமகண்டம் 12.00– 1.30, குளிகை காலம் 3.00– 4.30, வார சூலம் மேற்கு (பரிகாரம் வெல்லம்) ஸ்மார்த்த வளர்பிறை ஏகாதசி விரதம்

மேடம்: நஷ்டம், கவலை

இடபம்: நிறைவு, பூர்த்தி

மிதுனம்: மறதி, விரயம்

கடகம்: தடை, தாமதம்

சிம்மம்: வாழ்வு, வளம்

கன்னி: பிணி, பீடை

துலாம்; களிப்பு, கொண்டாட்டம்

விருச்சிகம்: பகை, சினம்

தனுசு: பயம், விரோதம்

மகரம்: இன்பம், சுகம்

கும்பம்: துன்பம், கவலை

மீனம்: அன்பு, ஆதரவு

கண்ணன் தாலாட்டு பாசுரம் “மெய்தி மிரும் நானப் பொடியொடு மஞ்சளும் செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும் வெய்ய கலைப்பாகி கொண்ட உவளாய் நின்றாள் ஐயா! அழேல், அழேல், தாலே லோ அரங்கத் தனையானே! தாலேலோ! பொருளுரை: ஆண் மானை வாகனமாய் கொண்ட பார்வதி தேவி உனக்கு பூசிக்குள்ளிக்க சந்தனமும் வாசனை மஞ்சள் பொடியும் அழகிய கண்களுக்கு ஏற்ற மையையும் திரு நெற்றியில் இட சிந்துரத்தையும் கொண்டு நடுவே நிற்கின்றாள். திருவரங்கத்தில் ஆதி சேஷன் மேல் பள்ளி கொண்ட அரங்கனே அழாமல் இருக்க உன்னைத் தாலாட்டுகிறேன். (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

சனி, குரு கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று 

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 8, 6

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ்சிவப்பு

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)