12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (07.09.2019)..!

Published on 2019-09-07 10:46:43

07.09.2019 ஸ்ரீவிகாரிவருடம் ஆவணி மாதம் 21 ஆம் நாள் சனிக்கிழமை

சுக்கிலபட்ச நவமித் திதி பின்னிரவு 02.18 வரை. அதன்மேல் தசமி திதி. கேட்டை நட்சத்திரம் பகல் 10.50 வரை. பின்னர் மூலம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை நவமி. சித்தயோகம் சம நோக்குநாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் கார்த்திகை, ரோகிணி சுபநேரங்கள் பகல் 10.45-11.45 மாலை 04.45 - 05.45 ராகுகாலம் 09.00-10.30 எமகண்டம் 01.30 - 03.00 குளிகைகாலம் 06.00 - 07.30 வார சூலம் கிழக்கு (பரிகாரம் தயிர்) குங்கிலயக் கலயனார் குருபூஜை.

மேடம் :புகழ், பாராட்டு

இடபம் :நன்மை, அதிஷ்டம் 

மிதுனம் :புகழ், பெருமை

கடகம் :ஆரோக்கியம், சுகம்

சிம்மம் :முயற்சி, முன்னேற்றம் 

கன்னி :மகிழ்ச்சி, சந்தோஷம் 

துலாம் :உழைப்பு, உயர்வு 

விருச்சிகம் :புகழ், செல்வாக்கு

தனுசு :நிறைவு, பூர்த்தி

மகரம் :லாபம், லக் ஷ்மீகரம்

கும்பம் :செலவு, விரயம்

மீனம் :நற்செயல், பாராட்டு

விஷ்ணு ரூப வர்ணனை (கல்கி அவதாரம்) விராட்ரூபமாகிய பகவானுக்கு பூமிபாதம்.  ஆகாயம் தலை. அந்தரிட்சம் நாபி. சூரிய சந்திரர்கள் கண். வாயு மூக்கு திசைகள் காது. பிரஜாபதி ஆண்குறி மிருத்யுவாயு. லோக பாலகர்கள் புஜங் கள். சந்திரன் மனது. யமன் புருவம் 

ஆகவும் இருக்கின்றான். அந்த எல்லை யற்ற பரம்பொருளுக்கு வெட்கம் மேல் உதடு நிலவொளி பல்வரிச மரங்கள் மேனி ரோமம் மேகங்கள் தலைமயிர் பிறப்பு, இறப்பு அற்ற இவனுக்கு ஆத்ம ஜோதி உயிர். வேதங்கள் பட்டு பீதாம்பரங்கள். யோகம் மகரகுண்டலங்கள் பிரகிருதி ஆசனம்.  (தொடரும்)  

கேது சூரியன் கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட இன்று. 

அதிஷ்ட எண்கள்  1, 2, 5

பொருந்தா எண்கள்  7, 8

அதிஷ்ட வர்ணங்கள் மஞ்சள், வெளிர் பச்சை