12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (05.09.2019)..!

Published on 2019-09-05 10:11:43

05.09.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஆவணி மாதம் 19 ஆம் நாள் வியாழக்கிழமை

சுக்­கில பட்ச ஸப்­தமி திதி பின்­னி­ரவு 3.08 வரை. அதன் மேல் அஷ்­டமி திதி. விசாகம் நட்­சத்­திரம் பகல் 10.56 வரை. பின்னர் அனுஷம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை ஸப்­தமி. சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள்.  சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அஸ்­வினி,பரணி. சுப­நே­ரங்கள் பகல் 10.45–11.45. பிற்­பகல் 12.15 – 1.15  ராகு­காலம் 1.30–3.00.  எம­கண்டம் 6.00 – 7.30. குளிகை காலம் 9.00–10.30. வார­சூலம் –தெற்கு (பரிகாரம்– தைலம்). 

மேடம் :பகை, விரோதம்

இடபம் :நன்மை, அதிர்ஷ்டம்

மிதுனம் :நற்செயல், புகழ்

கடகம் :லாபம், ஆதாயம்

சிம்மம் :சுகம், ஆரோக்கியம் 

கன்னி :புகழ் , பெருமை

துலாம் :கவலை, கஷ்டம்

விருச்சிகம் :நலம், ஆரோக்கியம்

தனுசு :நட்பு, உதவி 

மகரம் :வெற்றி, செல்வாக்கு

கும்பம் :லாபம், லக் ஷ்மீகரம்

மீனம் :காரியசித்தி, அனுகூலம்

குலச்­சி­றையார் நாயனார் குரு பூஜை ‘முத்­து­டைத்து’ என்று போற்­றப்­படும் பாண்­டிய நாட்டில் மண­மேற்­கு­டியில் பிறந்­தவர். நின்­றசீர் நெடு­மாறன் என்ற மன்­ன­னிடம் தலைமை அமைச்­ச­ராகப் பணி­யாற்­றி­யவர். சைவ மதக் கொள்­கை­களை உல­க­றியச் செய்­தவர். திரு­ஞா­ன­சம்­பந்­தரை மது­ரைக்கு அழைத்து சைவத்தை பரப்பி சமண சம­யத்தை மண்­மூடச் செய்­தவர். ‘பெரு­நம்பி குலச் சிறையார்’ என்று சுந்­த­ர­மூர்த்தி நாய­னாரும், ஒட்­டக்­கூத்­தரும் இவரைப் போற்றிப் பாடியுள்ளனர்.

(‘நன்றி உணர்­வுடன் வாழ்வோம் நன்றி மறத்­தலை விலங்­குகள் மனி­த­னுக்கு விட்டு விடு­கின்­ற­ன’–­சார்லஸ் செர்­லட்டன்)

புதன், சனிக் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று

அதிர்ஷ்ட எண்கள் : 1– 5

பொருந்தா எண் : 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: சாம்பல், நீல நிறங்கள்