12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (02.09.2019)..!

Published on 2019-09-02 10:16:00

02.09.2019 ஸ்ரீவி­காரி வருடம் ஆவணி மாதம் 16ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச திரி­தி­யை­திதி காலை 9.44 வரை. அதன் மேல் சதுர்த்தி திதி அஸ்தம் நட்­சத்­திரம் பிற்­பகல் 1.56 வரை பின்னர் சித்­திரை நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை சதுர்த்தி சித்த யோகம் சம­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் பூரட்­டாதி உத்­தி­ரட்­டாதி சுப­நே­ரங்கள் காலை 9.15–10.15, மாலை 4.45–5.45, ராகு­காலம் 7.30–9.00, எம­கண்­டம 10.30–12.00, குளிகை காலம் 1.30–3.00 வார­சூலம் கிழக்கு (பரி­காரம் -தயிர்) சுப­மு­கூர்த்த நாள்.

மேடம் : செலவு, விரயம்

இடபம்         : வெற்றி, அதிர்ஷ்டம்

மிதுனம்      : நோய், வருத்தம்

கடகம்        : சிக்கல், சங்­கடம்

சிம்மம்       : முயற்சி, முன்னேற்றம்

கன்னி : கவலை, கஷ்டம்

துலாம் : பிணி, பீடை

விருச்­சிகம் : சுபம், மங்­கலம்

தனுசு : மகிழ்ச்சி, சந்­தோஷம்

மகரம் : புகழ், பெருமை

கும்பம் : அன்பு, ஆத­ரவு

மீனம் : பயம், பகை

இன்று ஆவணி மாதம் விநா­யக சதுர்த்தி விரதம். பிர­ணவப் பொருள் ஓங்­காரம். ஓங்­கா­ரத்­தி­லி­ருந்தே உலகம் தோன்­றி­ற்று. பிரம்ம தேவன் விடுத்த கொட்­டா­வியில் தோன்­றி­யவன் சிந்­தூரன், அவன் யாரை­யா­வது அன்பால் தட­வினால் அவர்கள் உடல் நீறாய்­போய்­விடும் என்ற வரத்தைப் பெற்­றவன். அவன் வெள்ளியங்கிரியில் உமா தேவி­யுடன் வீற்­றி­ருந்த சிவனை தடவி அன­லாக்கச் செல்ல வினா­யகர் பிரா­மண வடிவம் கொண்டு இடையில் பரா­யுசத்தை நாட்ட, சிந்­தூரன் பூமியில் வந்து விழுந்த தினமே ஆவ­ணியில் விநா­யக சதுர்த்­தி­யாக கொண்­டா­­டப்­படும் நாள். சிவனே உகந்த விநா­ய­கரை பூஜித்த தினம் இன்­றாகும். இன்று விநா­யகப் பெரு­மானை வழி­படல் நன்று. (கல்கி அவ­தாரம் நாளை தொடரும்) சந்­திரன், புதன் ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள் 1,5,7.

பொருந்தா எண்கள் 9,8,6.

அதிர்ஷ்ட வர்ணங்கள் பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)