12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (14.08.2019)..!

Published on 2019-08-14 09:36:01

14.08.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஆடி மாதம் 29ஆம் நாள் புதன்­கி­ழமை

சுக்­கில பட்ச சதுர்த்­தசி திதி மாலை 4.37 வரை. அதன் மேல் பௌர்­ணமி திதி. உத்­தி­ராடம் நட்­சத்­தி­ரம்­காலை 7.04 வரை பின்னர் திரு­வோணம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை சதுர்த்­தசி. அமிர்த சித்­த­யோகம் மேல் நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் புனர்­பூசம் சுப நேரங்கள் பகல் 10.45-–11.45, மாலை 4.45-–5.45, ராகு­காலம் 12.00-1.30, எம­கண்டம் 7.30–-9.00, குளிகை காலம் 10.30-–12.00. வார­சூலம் வடக்கு (பரி­காரம் -பால்)

மேடம் : சிக்கல், சங்­கடம்

இடபம் : பக்தி, அனுக்­கி­ரகம்

மிதுனம் : பகை, விரோதம்

கடகம் : வெற்றி, அதிர்ஷ்டம்

சிம்மம் : விருப்பம், ஆசை

கன்னி : ஜெயம், புகழ்

துலாம் : உதவி, நட்பு

விருச்­சிகம் : தெளிவு, வெற்றி

தனுசு : மகிழ்ச்சி, சந்­தோஷம்

மகரம் : தடை, தாமதம்

கும்பம் : சுகம், ஆரோக்­கியம்

மீனம் : வரவு, லாபம்

திரு­வோ­ண­வி­ரதம். பௌர்­ணமி விரதம் தெகி­வளை ஸ்ரீவெங்­க­டேஸ்­வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் பகல் சத்­திய நாரா­யண பூஜை அன்­ன­தானம் நடை­பெறும். எதிர்­வரும் 23.08.2019 வெள்ளிக்­கி­ழமை இரவு கிருஷ்­ணாஸ்­டமி, ஜென்­மாஷ்­டமி, கோகு­லாஷ்­ட­மி­யன்று பாட வேண்­டிய கண்ணன் தாலாட்டு, பெரி­யாழ்வார் அருளிச் செய்த முதற்­பத்து நான்காம் திருமொழி சங்கின் வலம்­பு­ரியும் சேவடிக் கிண்­கி­ணியும் அங்கைச் சரி­வ­னையும் நானும் அரைத் தொடரும் அங்கன் விசும்பில் அம­ரர்கள் போத்­தந்தார் செங்கன் கரு­மு­கிலே! தாலேலோ! தேவகிச் சிங்­கமே தாலேலோ! வஞ்­ச­னையால் வந்த பேய்ச்சி முலை­யுண்ட அஞ்­சன வண்­ணனை ஆய்ச்சி தாலாட்­டிய செஞ்சொல் மறை­யவர் சேர் புதுவைப் பட்டன் எஞ்­சாமை வல்­ல­வர்க்கு இல்லை இடர்­தானே. (தொடரும்).

புதன் கேது கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.அதிர்ஷ்ட எண்கள் 2,1,5.

பொருந்தா எண்கள் 8,7.

அதிர்ஷ்ட வர்ணங்கள் வெளிரான மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)