12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (10.08.2019)..!

Published on 2019-08-10 09:17:43

10.08.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஆடி மாதம் 25ஆம் நாள் சனிக்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச தசமி திதி பிற்­பகல் 2.20 வரை. அதன்மேல் ஏகா­தசி திதி. கேட்டை நட்­சத்­திரம் பின்­னி­ரவு 3.13 மணி­ வரை. பின்னர் மூலம் நட்­சத்­திரம். சிரார்த்­த­திதி வளர்­பிறை. ஏகா­தசி. சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் கார்த்­திகை. சுப­நே­ரங்கள் பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகு­ காலம் 9.00 – 10.30, எம­கண்டம் 1.30–3.00, குளி­கை­ காலம் 6.00 – 7.30. வார­சூலம் – கிழக்கு (பரி­காரம்- – தயிர்)

மேடம்: லாபம், லக்ஷ்­மீ­கரம்

இடபம்: அமைதி, தெளிவு

மிதுனம்: அன்பு, ஆத­ரவு

கடகம்: பகை, விரோதம்

சிம்மம்: தடை, இடை­யூறு 

கன்னி: தனம், சம்­பத்து

துலாம்: இலாபம், ஆதாயம்

விருச்­சிகம்: பிர­யாணம், அலைச்சல்

தனுசு: மறதி, விரயம்

மகரம்: நன்மை, அதிர்ஷ்டம்

கும்பம்: புகழ், பெருமை

மீனம்:  விரயம், செலவு

கோட்­புலி நாயனார் குரு­பூஜை. சோழ­நாட்டில் நாட்­டி­யத்தான் குடியில் வீர­வே­ளாளர் மரபில் வாழ்ந்­தவர். சிவத்­தொண்டர், சோழர்  படைத் ­த­ள­பதி, அஞ்­சாத வீரர், கொலை செய்­வதில் புலி­போன்ற குணம் மிக்­கவர். ஆதலால் கோட்­பு­லியர் என்ற காரணப் பெயர் பெற்­றவர். இவர் காட்­டிய பக்­தியின் சக்­தியால் சிவ­பெ­ருமான் திரு­வடி சேர்ந்­தவர். திரு­க­லி­யனார் நாயனார் குரு­பூஜை, தொண்டை நன்­நாட்டின் திரு­வொற்­றியூர் என்னும் திருத்­த­லத்தில் வணிகர் குடியில் அவ­த­ரித்­தவர். திரு­வி­ளக்­கேற்ற எண்ணெய் இல்­லா­ததால் தன் உதி­ரத்தை எண்­ணெ­யாக ஊற்றி சிவ­பெ­ரு­மா­னுக்கு விளக்­கேற்றி சிவ­பதம் அடைந்­தவர்.

சூரியன், குரு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிஷ்ட எண்கள்: 1 – 5

பொருந்தா எண்: 8 

அதிஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், ஊதா  நிறங்கள்