12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (08.08.2019 )..!

Published on 2019-08-08 10:22:02

08.08.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஆடி மாதம் 23 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச அஷ்­டமி திதி மாலை 4.07 வரை. அதன் மேல் நவமி திதி. விசாகம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 3.04 வரை. பின்னர் அனுஷம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை அஷ்­டமி. சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் அஸ்­வினி. சுப­நேரம் பகல் 10.45 – 11.45, ராகு­காலம் 1.30 –3.00, எம­கண்டம் 6.00 –7.30, குளிகை காலம் 9.00 –10.30, வார­சூலம் தெற்கு. (பரி­காரம் தைலம்)

மேடம் : போட்டி, ஜெயம்

இடபம் : அன்பு, ஆத­ரவு

மிதுனம் : தோல்வி, கவலை

கடகம் : அமைதி, நிம்­மதி

சிம்மம் : களிப்பு, மகிழ்ச்சி

கன்னி : வெற்றி, அதிர்ஷ்டம்

துலாம் : நட்பு, உதவி

விருச்­சிகம் : பகை, விரோதம்

தனுசு : விரயம், செலவு

மகரம் : நலம், ஆரோக்­கியம்

கும்பம் : இலாபம், லக்ஷ்­மீ­கரம்

மீனம் : நன்மை, நலம்

நாளை வெள்­ளிக்­கி­ழமை. ஸ்ரீவ­ரலஷ்மி விரத பூஜை. சிர­வனை மாதத்தில் பௌர்­ண­மிக்கு முன்­வரும் வெள்­ளிக்­கி­ழமை இவ்­வி­ர­தத்தை சுமங்­கலிப் பெண்கள் அனுஷ்­டித்து நோன்புச் சட்டை அணிந்­து­கொள்ள வேண்டும். மகா­லஷ்மி தாயாரின் அருளால் பெண்கள் தீர்க்க சுமங்­க­லியாய் இருப்பர். சிவ­பெ­ரு­மானாய் பார்­வதி தேவிக்கு உப­தே­சிக்­கப்­பட்­டது இவ்­வி­ர­தத்தின் மகிமை.

சனி, சூரியன் கிர­கங்­களின் ஆதிக்கம் கொண்ட நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள் 1, 5, 6

பொருந்தா எண்கள் 7, 8

அதிர்ஷ்ட வர்ணம் மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)