12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (05.08.2019 )..!

Published on 2019-08-05 09:54:24

05.08.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஆடி மாதம் 20 ஆம் நாள் திங்கட்கிழமை

சுக்கிலபட்ச பஞ்சமி திதி முன்னிரவு 9.35 வரை. அதன் மேல் சஷ்டி திதி. உத்தரம் நட்சத்திரம் காலை 7.15 வரை. அதன் மேல் அஸ்தம் நட்சத்திரம் பின்னிரவு 5.49 வரை. பின்னர் சித்திரை நட்சத்திரம். நட்சத்திர அவமாகம். சித்தயோகம். கரிநாள். சுபம் விலக்குக. சிரார்த்த திதி. வளர்பிறை. பஞ்சமி சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் பூரட்டாதி. சுபநேரங்கள்: காலை 9.15 – 10.15 மாலை 5.15 – 6.00 ராகுகாலம் 7.30 – 9.00 எமகண்டம் 10.30 – 12.00 குளிகைகாலம் 1.30 – 3.00. 

மேடம் :புகழ், கீர்த்தி

இடபம் :சுபம், மங்களம்

மிதுனம் :அமைதி, நிம்மதி

கடகம் :ஆசை, நஷ்டம்

சிம்மம் :உயர்வு, மேன்மை

கன்னி :புகழ், பெருமை

துலாம் :லாபம், லஷ்மீகரம்

விருச்சிகம் :அன்பு, ஆதரவு

தனுசு :அன்பு, இரக்கம்

மகரம் :மகிழ்ச்சி, செல்வாக்கு

கும்பம் :பக்தி, ஆசி

மீனம் :அன்பு, பாசம்

இன்று கருட பஞ்சமி, நாக பஞ்சமி. சர்ப்ப தோஷ நிவர்த்தி சாந்தி பரிகாரங்கள் செய்தல் நன்று. தெஹிவளை ஸ்ரீ வெங்கடேஸ்வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்தானத்தில் எதிர்வரும் 09.08.2019 நடைபெறவுள்ள ஸ்ரீ வரலஷ்மி விரத பூஜையை முன்னிட்டு இன்று முதல் ஸ்ரீ மகாலஷ்மி தாயாருக்கு இலட்சார்ச்சனை தினமும் நடைபெறும். திருவிளக்குப் பூஜை, சுமங்கலிப் பூஜை, வரலஷ்மி பூஜை பற்றிய விளம்பரங்கள். புதன் கிழமை வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமாகும்.

புதன், கேது கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1 – 2 – 5

பொருந்தா எண்கள்: 8 – 7

அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிரான மஞ்சள், நீலம் நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)