11.04.2016 மன்மத வருடம் பங்குனி மாதம் 29 ஆம் நாள் திங்கட்கிழமை

Published on 2016-04-11 07:27:15

சுக்கிலபட்ச சதுர்த்தி திதி காலை 8.19 வரை அதன் மேல் பஞ்சமி திதி. ரோகினி நட்சத்திரம் அதன் மேல் கார்த்திகை நட்சத்திரம் 9.34.வரை பின்னர் மிருகசீரிஷம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை பஞ்சமி அமிர்தயோகம். மேல்நோக்கு நாள். சுப முகூர்த்த நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  சுவாதி, விசாகம். சுபநேரங்கள் காலை 9.30 – 10.30. மாலை 4.30 – 5.30 ராகுகாலம் 7.30 – 9.00. எமகண்டம் 10.30 – 12.00. குளிகை காலம் 1.30 – 3.00 வார சூலம் கிழக்கு.  (பரிகாரம் – தயிர்).

மேடம் : வெற்றி, அதிர்ஷ்டம்

இடபம் : நன்மை, யோகம்

மிதுனம் :பயம், பகை

கடகம் : நிறைவு, ஆக்கம்

சிம்மம் : சிக்கல், சங்கடம்

கன்னி :அன்பு, இரக்கம்

துலாம் : லாபம், லஷ்மீகரம்

விருச்சிகம் : களிப்பு, கொண்டாட்டம்

தனுசு : நலம், ஆரோக்கியம்

மகரம் : உயர்வு, மேன்மை

கும்பம் : சோர்வு, அசதி

மீனம் : பாசம், அன்பு

துர்முகி வருஷப் பிறப்பு: மன்மத வருடம் பங்குனி மாதம் 31 ஆம் நாள் 13.04.2016 புதன்கிழமை முன்னிரவு 6 மணி 36 நிமிடத்தில் தமிழ் வருடங்கள் அறுபதில் முப்பதாவது வருடமாகிய இப் புதுவருடம் பிறக்கின்றது. அன்று பிற்பகல் 2.36 மணிமுதல் முன்னிரவு 10.36 வரை விஷூபுண்ய காலமாகும். இக்காலத்தில் இறைவனை நோக்கி சங்கற்பம் செய்து மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்து பச்சை, வெள்ளை நிறமுடைய ஆடைகள் தரித்து ஆபரணம் அணிந்து, குலதெய்வம் இஷ்ட தெய்வங்களைப் பிரார்த்தித்து, பெரியோர்கள் ஆசிபெற்று, மங்கள பொருட்களைத் தரிசித்து, பஞ்சாங்கம் வாசித்தும் மறுநாள் 14.04.2016 வியாழக்கிழமை அதிகாலையில் எழுந்து வைகறையில் சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டு, கோபூஜை செய்து பசுவுக்கு உணவளித்து தானதர்மங்கள் இயற்றி வருவது உகந்தது. எல்லோருக்கும் இப்புத்தாண்டு இன்பமாய் அமைய துவாரகா நிலையாதி கண்ணனை பிரார்த்திக்கின்றேன். (திவ்ய பிரபந்தம் நாளை தொடரும்) 

சந்திரன், சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 7,6

பொருந்தா எண்கள்:  9, 8,3

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  பச்சை.

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)