10.04.2016 மன்மத வருடம் பங்குனி மாதம் 28 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை

Published on 2016-04-11 07:26:20

சுக்கிலபட்ச திரியை திதி பகல் 10.26வரை. அதன் மேல் சதுர்த்தி திதி. கார்த்திகை நட்சத்திரம் பகல் 10.46 வரை. பின்னர் ரோஹினி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை சதுர்த்தி சித்தாமிர்தயோகம். கீழ்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் சித்திரை, சுவாதி. சுபநேரங்கள் காலை 6.30 – 7.30. மாலை 3.30 – 4.30 ராகுகாலம் 4.30 – 6.00. எமகண்டம் 12.00 – 1.30. குளிகை காலம் 3.00 – 4.30 வார சூலம் மேற்கு.  (பரிகாரம் – வெல்லம்) கார்த்திகை விரதம், சதுர்த்தி விரதம், விநாயகர், முருகன் வழிபாடு சிறந்தது.

மேடம் : நன்மை, அதிர்ஷ்டம்

இடபம் : ஓய்வு, அசதி

மிதுனம் : நிறைவு, மகிழ்ச்சி

கடகம் : புகழ் , பாராட்டு

சிம்மம் : நலம், ஆரோக்கியம்

கன்னி : இன்பம், மகிழ்ச்சி

துலாம் : நட்பு, உதவி

விருச்சிகம் : பக்தி, ஆசி

தனுசு : லாபம், லஷ்மீகரம்

மகரம் : நிறைவு, ஆக்கம்

கும்பம் : தனம், லாபம்

மீனம் : களிப்பு, மகிழ்ச்சி

பெரியாழ்வார் திருமொழி கச்சொடு பொற்சுரிகை காம்பு கனகவளை உச்சி மணிச்சட்டி ஒண்தாள் நிறைப் பொற்பூ அச்சுதனுக்கென்று அவளியாள் போத்தந்தாள் நச்சு முலையுண்டாய் தாலேலோ. நாராயணா அழேல் தாலேலோ பொருளுரை: பூமி பிராட்டி ஆடையின் மேல் கட்ட கச்சையும். பொற்பிடியுள்ள வாளையும் கரைகட்டிய ஆடையையும் தங்க வளையல்களையும் தலையில் அணியும் நவரத்னச் சுட்டியையும் தங்கப் பூக்களையும் அனுப்பியுள்ளாய். பூதகி என்ற அரக்கியின் நஞ்சு பூசப் பெற்ற முலைப்பாலை குடித்தவனே நாராயணா அழாமல் இரு. உன்னைத் தாலாட்டுகிறேன். (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

சூரியன், புதன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்:      8

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  மஞ்சள், சாம்பல்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)