09.04.2016 மன்­மத வருடம் பங்­குனி மாதம் 27 ஆம் நாள் சனிக்­கி­ழமை

Published on 2016-04-09 09:26:47

சுக்­கி­ல­பட்ச துவி­தியை திதி பகல்12.42 வரை. அதன் மேல் திரி­தியை திதி. பரணி நட்­சத்­திரம் பின்­னி­ரவு 12.12 வரை. பின்னர் கார்த்­திகை நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை திரி­தியை சித்­தா­மிர்­த­யோகம். கீழ்­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அஸ்தம், சித்­திரை. சுப­நே­ரங்கள் காலை 7.30 – 8.30. மாலை 4.30 – 5.30 ராகு­காலம் 9.00 – 10.30. எம­கண்டம் 1.30 – 3.00. குளிகை காலம் 6.00 – 7.30 வார சூலம் கிழக்கு. (பரி­காரம் – தயிர்) சௌபாக்­கிய கௌரி­வி­ரதம்.

மேடம் : துணிவு, முன்­னேற்றம்

இடபம் : பக்தி, ஆசி

மிதுனம் :நட்பு, உதவி

கடகம் : நலம், ஆரோக்­கியம்

சிம்மம் : தனம், சம்­பத்து

கன்னி : இன்பம், மகிழ்ச்சி

துலாம் : போட்டி, ஜெயம்

விருச்­சிகம் : புகழ், பெருமை

தனுசு : செலவு, பற்­றாக்­குறை

மகரம் : உண்மை, உறுதி

கும்பம் : சுகம், ஆரோக்­கியம்

மீனம் : நிறைவு, மகிழ்ச்சி

பெரி­யாழ்வார் திரு­மொழி முதல் பத்து நான்காம் திரு­மொழி கண்ணன் தாலாட்டு பாசுரம் " சங்கின் வலம் புரியும் சேவடி கிண்­கி­ணியும் அங்கைச் சரி­வ­ளையும் நாணும் அரைத்­தொ­டரும் அங்கன் விசும்பில் அம­ரர்கள் போர்த்­தந்தார் செங்கண் கரு­மு­கிலே தாலேலோ! தேவ­கிச்­சிங்­கமே தாலேலோ! பொரு­ளுரை: தேவர்கள் அனை­வரும் சங்கில் உயர்ந்­த­தான வலம்­பு­ரி­யையும் திரு­வ­டி­க­ளுக்கு சதங்­கை­ளையும் அழ­கிய முன் சரி­வ­ளையும் தங்க அரைஞாண் கயிறும் திரு­மார்பில் அணிய நாணும் அனுப்­பி­யுள்­ளனர். சிவந்த திருக்­கண்­க­ளை­யு­டைய கார்­மேகம் போன்­ற­வனே! தேவகி வயிற்றில் பிறந்த சிங்­கமே உன்னைத் தாலாட்­டு­கிறேன். ஆழ்வார் திரு­வ­டி­களே சரணம்.

செவ்வாய், ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

பொருந்தா எண்கள்: 2, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: இளஞ் சிவப்பு, நீலம், மஞ்சள்