08.04.2016 மன்மத வருடம் பங்குனி மாதம் 26 ஆம் நாள் வெள்ளிக்கிழமை

Published on 2016-04-08 07:53:09

சுக்கிலபட்ச பிரதமை திதி மாலை 3.04 வரை அதன் மேல் துவிதியை திதி. அஸ்வினி நட்சத்திரம் பின்னிரவு 1.46 வரை. பின்னர் பரணி நட்சத்திரம். சிரார்த்த திதிகள் வளர்பிறை பிரதமை துவிதியை. அமிர்தசித்தியோகம். சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் உத்திரம், அஸ்தம். சுபநேரங்கள் 9.30 – 10.30. மாலை 4.30 – 5.30 ராகுகாலம் 10.30 – 12.00. எமகண்டம் 3.00 – 4.30. குளிகை காலம் 7.30 – 9.00 வார சூலம் மேற்கு.  (பரிகாரம் – வெல்லம்) தெலுங்கு வருடப்பிறப்பு. சந்திரதரிசனம். வசந்த நவராத்திரி பூஜாரம்பம்.

மேடம் : அன்பு, பாசம்

இடபம் : தனம், சம்பத்து

மிதுனம் : புகழ், பெருமை

கடகம் : செலவு, விரயம்

சிம்மம் : ஓய்வு, அசதி

கன்னி : சினம், பகை

துலாம் : லாபம், லஷ்மீகரம்

விருச்சிகம் : மறதி, விரயம்

தனுசு : அன்பு, ஆதரவு

மகரம் : பக்தி, அசதி

கும்பம் : கவனம், எச்சரிக்கை

மீனம் : உயர்வு, மேன்மை

பெரியாழ்வார் அருளிய முதல் பத்து நான்காம் திருமொழி “கண்ணன் தாலாட்டு” மாணிக்கம் கட்டி வயிரம் இடைக்கட்டி ஆணிப் பெண்ணால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில் பேணி உனக்கு பிரம்மன் விகு தந்தான் மாணிக்குறளனே! தாலேலோ வையம் அளந்தானே! தாலேலோ பொருளுரை – படைப்புக் கடவுள் பிரம்மன் இரு புறத்திலும் மாணிக்கத்தைப் பதித்து நடுவில் வைரத்தை வைத்து கலப்படமற்ற ஆடகத்தங்கத்தால் உனக்கு அழகிய சிறு தொட்டில் செய்து அனுப்பியுள்ளான். மூன்றடி மண்கேட்டு வாமனனாக அவதரித்தவனே! உலகத்தை அளந்த துவாரகைக் கண்ணனே! உன்னைத் தாலாட்டுகிறேன். ஆழ்வார் திருவடிகளே சரணம்.

(“கீழே விழுந்தவனைக் கண்டு சிரிக்காதே. நீ செல்லும் பாதையிலும் பாசி உண்டு பள்ளமும் உண்டு”)

சனி, குரு கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 8, 6

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  மஞ்சள், ஊதா

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)