07.04.2016 மன்மத வருடம் பங்குனி மாதம் 25 ஆம் நாள் வியாழக்கிழமை

Published on 2016-04-07 07:33:57

அமாவாஸ்யை திதி மாலை 5.28 வரை. அதன் மேல் பிரதமை திதி ரேவதி நட்சத்திரம். பின்னிரவு 3.25 வரை. அதன் மேல் அஸ்வினி நட்சத்திரம். சிரார்த்த திதி அமாவாஸ்யை சித்தாமிர்த யோகம். பிதிர்தர்பனம்  செய்தல் நன்று. சமநோக்கு நாள் சந்திரஷ்டம நட்சத்திரம் உத்தரம். சுபநேரங்கள் காலை 10.30 – 11.30 பிற்பகல் 12.30 – 1.30. ராகுகாலம் 1.30 – 3.00. எமகண்டம் 6.00 – 7.30. குளிகை காலம் 9.30 – 10.30. வாரசூலம் – தெற்கு (பரிகாரம் – தைலம்) ரேவதி நட்சத்திர தினமான இன்று திருவோணத்தில் அவதரித்த நம்பெருமானை வழிபடல் நன்று. இன்று நம்பெருமானார் திருநட்சத்திரம்.

மேடம் : இன்பம், சுகம்

இடபம் : புகழ், பெருமை

மிதுனம் : அன்பு, சாந்தம்

கடகம் : வெற்றி, அதிர்ஷ்டம்

சிம்மம் : போட்டி, ஜெயம் 

கன்னி : அசதி, வருத்தம்

துலாம் : அமைதி, சாந்தம்

விருச்சிகம் : முயற்சி, முன்னேற்றம்

தனுசு : ஓய்வு, வருத்தம்

மகரம் : புகழ், பாராட்டு

கும்பம் : பரிவு, பாசம்

மீனம் : பிரிவு, பாசம்

குலசேகராழ்வார் அருளிய “ஐந்தாம் திருமொழி” வித்துவக் கோடு வைபவம் “தருதுயரம் தடாயேல் உன் சரணில்லாமல் சரணில்லை விரை குழுவு மலர் பொழில் சூழ் விற்றுவக் கோட்டமானே! அரிசினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவர்தான் அருள் நினைந்தே அழுங்குழவி: அதுவே போன்றிருந்தேன்." பொருளுரை: சுகந்த புஷ்பங்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட வித்துவக் கோட்டமானே என்னைத் திருத்துவதற்காக நீ எத்தனை துன்பங்கள் தந்தாலும் உன் திருவடிகளையன்று வேறு புகலிடம் எனக்கு கிடையாது. சிறுவயதில் நான் செய்த தவறுகளுக்காக என் தாய் என்னை கோபித்து அடித்து தள்ளினாலும் தாயின் இரக்கத்தை வேண்டி அழுகின்ற குழந்தையின் நிலையில் தான் உன் அன்பை வேண்டி நான் உள்ளேன்  ஆழ்வார் திருவடிகளே சரணம்.

(“தான் உழைத்து தேடிய பொருள் உத்தமம். தந்தை வழியில் வந்த பொருள் மத்திமம். சகோதரனால் வந்த பொருள் அதமம். மனைவியால் வந்த பொருளோ அதமாதமம் ஆகும்.”)

கேது, சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7, 2

பொருந்தா எண்கள்:  8, 9

அதிர்ஷ் வர்ணங்கள்: வெளிர்நீலம், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)