எல்லாக் காயங்களுக்கும் குழந்தைகளின் புன்னகை என்னும்அருமருந்தே மருந்து..!: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (13.06.2019)..!

Published on 2019-06-13 10:49:24

13.06.2019 ஸ்ரீ விகாரி வருடம் வைகாசி மாதம் 30 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை 

சுக்­கி­ல­பட்ச ஏகா­தசி திதி மாலை 06.03 வரை. பின்னர் துவா­தசி திதி. சித்­திரை நட்­சத்­திரம். பகல் 12.18 வரை அதன்மேல் சுவாதி நட்­சத்­திரம். சிரார்த்தத் திதி வளர்­பிறை ஏகா­தசி. சித்­த­மிர்­த­யோகம் சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் உத்­தி­ரட்­டாதி ரேவதி சுப­நே­ரங்கள் பகல் 10.30 –11.30 மாலை 04.30– 05.30 ராகு­காலம் 01.30 03.00 எம­கண்டம் 06.00 –07.30 குளி­கை­காலம் 09.00 –10.30 வார­சூலம் தெற்கு (பரி­காரம் தைலம்) விவாக சுப­மு­கூர்த்தம். ஸர்வ நிர்­ஜல ஏகா­தசி விரதம்.  

மேடம் :ஜெயம், வெற்றி  - 

இடபம் :கவலை, கஷ்டம்

மிதுனம் :உழைப்பு, உயர்வு

கடகம் :நோய், ரோகம்

சிம்மம் :-பேராசை, நஷ்டம் 

கன்னி :சோதனை, சங்­கடம் 

துலாம் :ஏமாற்றம், கவலை

விருச்­சிகம் :தொல்லை, சங்­கடம் 

தனுசு :உற்­சாகம், வர­வேற்பு

மகரம் :தெளிவு, அமைதி

கும்பம் :பொறுமை, நிதானம்

மீனம் :கவனம், எச்­ச­ரிக்கை

எதிர்­வரும் சனிக்­கி­ழமை நம்­மாழ்வார் திரு­நட்­சத்­திரம். மாதம் வைகாசி நட்­சத்­திரம் விசாகம் அம்சம் சேனை முத­லியார். இவரை வேதம் தமிழ் செய்த மெய்யன் என்பர். அரு­ளிய பிர­பந்­தங்கள் திரு­வி­ருத்தம் (ரிக் வேத­சாரம்) திரு­வா­சி­ரியம் (யஜூர் வேதம்) திருவாய் மொழி (சாம வேத­சாரம் பெரிய திரு­வந்­தாதி (அதர்­வண வேத சாரம்) என்பர். (''வயது காதலைப் போன்­றது மறக்­கவும் முடி­யாது மறைக்­கவும் முடி­யாது" தாமஸ் டிக்கர்) ராகுவின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று. 

அதிஷ்ட எண்கள் --1, 5, 6

பொருந்தா எண் - 8

அதிஷ்ட வர்ணங்கள் - மஞ்சள், வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெகிவளை விஷ்ணு கோயில்)