12 ராசிகளுக்குமான 09-06-2019 முதல் 15-06-2019 வரையான முழுமையான பலன்கள் ஒரே பார்வையில்...

2019-06-11 13:08:08

01. இனிமையாகப் பேசும் மேஷ ராசி அன்பர்களே!


அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம் கொண்ட மேடராசி அன்பர்களுக்கு குடும்ப நிலை சார்ந்த மகிழ்வு இருக்கும். தொழில் நிலை சார்ந்த இலாபங்கள் சிறப்பாக அமையும். பணவரவு மிகவும் திருப்திகரமானதாக இருக்கும். புதிய முயற்சிகளில் அனுகூல நிலை அமையும். கடன் நிலைகளில் சுமுகமான பலன் இருக்கும். உறவினர்களின் மூலமாக நன்மைகள் அமையும். பெண்களுக்கு நன்மையுண்டு, மாணவர்களுக்கு சிறப்புண்டு. அனுகூலமான நாள் திங்கள்,  நன்மையான திகதி 13. 



02. உறுதியான மனம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!


 கார்த்திகை 2,3,4 ஆம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1,2 ஆம் பாதம் கொண்ட இடபராசியினருக்கு சற்று மந்தமான பலன் இருக்கும். தொழில் சார்ந்த வேலைப்பளு அதிகமிருக்கும். பணவரவு சற்று மத்திமமானதாகவே இருக்கும்.  தேவையற்ற அலைச்சல் நிலைகள் அதிகமிருக்கும். குடும்ப நிலையில் சிறு சிறு மந்தமான பலனிருக்கும். உடல் நிலை சார்ந்த சிறு சிறு சுகயீனம் இருக்கும். பெண்களுக்கு சஞ்சல நிலை. மாணவர்களுக்கு அலைச்சல் நிலை. அனுகூலமான நாள் வெள்ளி, நன்மையான திகதி 10.  


03. காரியங்களை திறம்படச் செய்யும் மிதுன ராசி அன்பர்களே!


 மிருகசீரிடம் 3,4 ஆம் பாதம் , திருவாதிரை, புனர்பூசம் 1, 2 , 3 ஆம் பாதம் கொண்ட மிதுனராசியினருக்கு வேலைப்பளு அதிகமிருக்கும். தொழில் சார்ந்த அலைச்சல் நிலைகள் அமையும்.  குடும்ப நிலையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.  கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலைகள் இருக்கும்.பணவரவு சற்று மத்திமமாகவே அமையும் நிலை இருக்கும். உறவினர்களுடன் சஞ்சல நிலை இருக்கும். பெண்களுக்கு மத்திம பலன். மாணவர்களுக்கு முயற்சி தேவை , அனுகூலமான நாள் புதன், நன்மையான திகதி 14.   

04. நண்பர்களிடம் அன்பு காட்டும் கடக ராசி அன்பர்களே!


புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம் கொண்ட கடகராசியினருக்கு அனுகூலமான நன்மைகள் ஏற்படும். தொழில் சார்ந்த சிறப்பும் இலாபமும் அமையும். குடும்ப நிலையில் மகிழ்வும் நன்மைகளும் இருக்கும். பணவரவு மிகவும் திருப்திகரமானதாகவே அமையும். கடன் நிலைகளில் சுமுகமான பலன்கள் இருக்கும். உறவினர்களின் மூலமாக நன்மைகள் அமையும்.   பெண்களுக்கு நன்மையுண்டு, மாணவர்களுக்கு சிறப்புண்டு. அனுகூலமான நாள் திங்கள், நன்மையான திகதி 11. 


05. முன்னேற்றச்செயல்களில் முன்நிற்கும் சிம்ம ராசி அன்பர்களே!


மகம், பூரம், உத்தரம் 1 ஆம் பாதம் கொண்ட சிம்மராசி அன்பர்களுக்கு தொழில் சார்ந்த  அலைச்சல் நிலை இருக்கும். குடும்ப நிலையில் சற்று  மத்திம பலனிருக்கும். தேவையற்ற அலைச்சல் நிலை அதிகமாக இருக்கும். பணவரவு ஓரளவிற்கு தேவைகளைப் பூர்த்தி செய்யும். கடன் நிலைகளில் சற்று இழுபறி நிலையிருக்கும். தொழில் சார்ந்த பிரயாணங்கள் அமையும்.  பெண்களுக்கு அலைச்சல் நிலை, மாணவர்களுக்கு சிரம நிலை . அனுகூலமான நாள் ஞாயிறு, நன்மையான திகதி 10.  

06. தனித்தன்மையோடு செயல்படும் கன்னி ராசி அன்பர்களே!


உத்தரம் 2,3,4 ஆம் பாதம், அத்தம், சித்திரை 1,2 ஆம் பாதம் கொண்ட கன்னி ராசியினருக்கு     குடும்ப நிலை சார்ந்த நன்மைகள் இருக்கும். தொழில் நிலை சார்ந்த சிறப்பும் இலாபங்களும் அமையும். எதிர்பாராத நன்மைகள் அமையும் பலாபலனிருக்கும். உறவினர்களின் மூலமாக நன்மைகள் அமையும். பணவரவு மிகவும் திருப்திகரமானதாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலையிருக்கும். பெண்களுக்கு நன்மையுண்டு, மாணவர்களுக்கு சிறப்புண்டு. அனுகூலமான நாள் புதன்,  நன்மையான திகதி 14.


7. எச்சரிக்கையோடு இருக்கும் துலா ராசி அன்பர்களே!

சித்திரை 3 ,4 ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1,2 ,3 ஆம் பாதம் கொண்ட துலாராசியினருக்கு     சற்று மத்திமமான பலன்களே அமையும். தொழில் சார்ந்த அலைச்சல் நிலை  அதிகமிருக்கும். குடும்ப நிலையில் மந்தமான பலாபலன் அமையும். உடல் நிலை சார்ந்த உபாதைகள் இருக்கும்.  பணவரவு சற்று மத்திமமானதாகவே அமையும். உறவினர்களுடன் சஞ்சல நிலைகள் இருக்கும். பெண்களுக்கு சிரம நிலை,  மாணவர்களுக்கு அலைச்சல் நிலை. அனுகூலமான நாள் வெள்ளி. நன்மையான திகதி 10. 


08. கலை நுணுக்கத்தோடு செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே!

விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம்,  கேட்டை கொண்ட விருட்சிக ராசியினருக்கு ஓரளவிற்கு அனுகூலமான நிலையிருக்கும். குடும்ப நிலை சார்ந்த நன்மைகள் அமைந்திருக்கும். பணவரவு ஓரளவிற்கு அனுகூலமானதாக அமையும். உறவினர்களின் மூலமாக நன்மைகள் இருக்கும். தொழில் சார்ந்த திடீர் நன்மைகள் அமையும்.  கொடுக்கல் வாங்கலில் அனுகூலமான நிலையிருக்கும்.  பெண்களுக்கு மத்திம பலன், மாணவர்களுக்கு முயற்சி தேவை, அனுகூலமான நாள் திங்கள்,  நன்மையான திகதி 13.

09.பிறரது விருப்பத்தை நிறைவேற்றும் தனுசு ராசி அன்பர்களே!


மூலம், பூராடம், உத்தராடம் 1 ஆம் பாதம் கொண்ட தனுசு ராசியினருக்கு சற்று காரியத்தடைகள் அமையும். தொழில் சார்ந்த வேலைப்பளு அதிகமாக  அமைந்திருக்கும். குடும்ப நிலையில் மந்தமான  சிரமமான பலனிருக்கும். கடன் நிலைகளில் சற்று இழுபறி நிலையிருக்கும். கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை அமையும். உறவினர்களுடன் சஞ்சல நிலை அமையும். பெண்களுக்கு சிரம நிலை, மாணவர்களுக்கு இழுபறி நிலை. அனுகூலமான நாள் வியாழன், நன்மையான திகதி 12.    

10. உறுதியான உள்ளம் கொண்ட மகர ராசி அன்பர்களே!



உத்தராடம் 2,3,4  ஆம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ஆம் பாதம் கொண்ட மகர ராசியினருக்கு குடும்ப நிலை சார்ந்த நன்மைகள் இருக்கும். தொழில் நிலையில் நல்ல  முன்னேற்றமும் இலாபங்களும் அமையும். பணவரவு மிகவும் திருப்திகரமானதாக இருக்கும். உறவினர்களின் மூலமாக  நன்மைகள் அமையும். கடன் நிலைகளில் சுமுகமான  பலன் இருக்கும்.  பெண்களுக்கு நன்மையுண்டு,  மாணவர்களுக்கு சிறப்புண்டு, அனுகூலமான நாள் ஞாயிறு, நன்மையான திகதி 11.

11. தெளிவான சிந்தனை கொண்ட கும்ப ராசி அன்பர்களே!



அவிட்டம் 3,4 ஆம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம் பாதம் கொண்ட 

கும்பராசியினருக்கு மனச் சஞ்சல நிலை அதிகமாக அமையும் . காரியத்தடை இருக்கும். குடும்ப நிலை சார்ந்த சிறு சிறு பிரச்சினை இருக்கும். பணவரவு சற்று  மத்திமமானதாகவே அமையும். தொழில் சார்ந்த வேலைப்பளு அதிகமாக அமையும்.  தாயார் வழியில் திடீர் செலவீனங்கள் இருக்கும்.  பெண்களுக்கு சஞ்சல நிலை,  மாணவர்களுக்கு நன்மையுண்டு.  அனுகூலமான நாள் திங்கள், நன்மையான திகதி 13. 


12. திறமையோடு கூடிய ஆற்றல் கொண்ட மீன ராசி அன்பர்களே!


பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி கொண்ட மீன ராசியினருக்கு சற்று காரியத் தடைகள் இருக்கும்.   கொடுக்கல் வாங்கல் சார்ந்த இழுபறி நிலையிருக்கும். தொழிலில் தேவையற்ற  அலைச்சல் நிலை அமையும். பணவரவு சற்று  மத்திமமானதாகவே  இருக்கும். சகோதரர் வழியில் சிறு சிறு சிக்கல் நிலை இருக்கும். தேவையற்ற அலைச்சல் நிலைகள் அதிகமாக இருக்கும். பெண்களுக்கு மத்திம பலன், மாணவர்களுக்கு முயற்சி தேவை. அனுகூலமான நாள் வியாழன்,  நன்மையான திகதி 12.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right